Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம்
கோவை: கோவை வடக்கு சட்டசபை தொகுதியின் பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசன் (Vanathi Srinivasan) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சையால் அவர் உடல்நலம் தேறி வருகிறார். இந்நிலையில் தான் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் வானதி சீனிவாசன் இன்று உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

பாஜக தேசிய மகளிரணியின் தலைவராக இருப்பவர் வானதி சீனிவாசன். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஆனார். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வானதி சீனிவாசன் தொகுதி மாறி களமிறங்கி உள்ளார்.
கால்வலியால் அவதி
கோவை தெற்கு சட்டசபை தொகுதிக்கு பதில் கோவை வடக்கு சட்டசபை தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிட்டுள்ளார். அங்கு தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில் தான் வானதி சீனிவாசனுக்கு உடல்நல பிரச்சனை ஏற்பட்டது. அவர் கால்வலியால் அவதிப்பட்டார். காலில் வீக்கம் ஏற்பட்டது.
ஐசியூவில் சிகிச்சை
இதையடுத்து தனது பிரசாரத்தை 10ம் தேதி மதியத்துக்கு மேல் ரத்து செய்தார். கேஎம்சிஎச் எனும் கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆண்டிபயாடிக் உள்பட மருந்துகள் வழங்கப்பட்ட நிலையில் ஒவ்வாமை ஏற்பட்டது. அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கும் உடல்நலம் தேறி வருகிறார் வானதி சீனிவாசன்.
வீடியோ வெளியிட்ட வானதி
இந்நிலையில் தான் சிகிச்சை பெறும் மருத்துவமனை பெட்டில் இருந்து வானதி சீனிவாசன் உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வானதி சீனிவாசன் கூறியதாவது: ''வணக்கம்.. அன்பு சகோதர சகோதரிகளே.. உங்களின் அன்பினாலும், பிரார்த்தனையாலும் விரைவாக உடல்நலம் தேறிக்கொண்டிருக்கிறேன்.
ஓரிரண்டு நாட்களில் உங்களை வந்து சந்திக்கிறேன். நம்முடைய தேர்தல் பிரசாரம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். கோவை வடக்கு சட்டசபை தொகுதியில் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்கும், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.
வணக்கம் 🙏
— Vanathi Srinivasan (@VanathiBJP) April 13, 2026
உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும், எனக்காக இறைவனிடம் மனமுருக வேண்டிக் கொண்டதற்கும் மனமார்ந்த நன்றி 🙏
இந்த தருணத்தில் என்னுடன் நின்ற அனைத்து அண்ணன்களுக்கும், அக்காக்களுக்கும், தம்பி தங்கைகளுக்கும் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் என் மனதில் பதிந்திருக்கிறது.
உங்கள்… pic.twitter.com/RoZmAfMphZ
வெற்றிகரமானதாக மாற்ற...
இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி பாஜகவின் பூத் காரிய கர்த்தர்களுடன் கலந்துரையாட இருக்கிறார். எனது பூத் வலிமையான பூத் என்ற கலந்துரையடாலில் நாம் அனைவரும் நமோஅப் செயலி மூலம் இணைந்து அவருடன் பேசுவதும், அவர் பேசுவதை கேட்பதுமாக இந்த நிகழ்வை வெற்றிகரமானதாக மாற்ற வேண்டும்.
தமிழகத்தின் மீது அளப்பரிய அன்பும், தமிழகத்தின் ஆற்றல் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்குமு் பிரதமர் மோடிக்கு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியின் மூலமாக நமது அன்பினை தெரிவிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி பேசுவதை கேட்க காத்திருப்போம். நன்றி'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications