Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தைக்கு பால் கொடுக்குற தாய் நீ! அழாதே! பணம் எதுவும் கட்டாதம்மா.. ஐசியூ வார்டில் வானதி அதிரடி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் பிறந்த குழந்தை சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதன் தாயை அழைத்து இந்த சிகிச்சைகளுக்கான செலவுகளை மருத்துவர் பார்த்துக் கொள்வார், நீங்கள் அழாதீர்கள் என ஆறுதல் சொன்னார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் நேற்றைய தினம் ஆய்வு மேற்கொண்டார்.

Vanathi Srinivasan helped a mother who struggles to save her 4th child after 3 died

இந்த ஆய்வின் போது மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தாய், சேய் சிகிச்சை பிரிவுக்கு சென்றார். அங்கு பிறந்த ஆண் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு பெற்றோர் கேட்க அதற்கு வானதி, நரேந்திரன் என பெயர் வைத்தார்.

அங்கு ஒரு பெண் தனது மகளுக்கு குழந்தை பிறந்ததாகவும் அந்த குழந்தைக்கு மரபணு பரிசோதனை மேற்கொள்ள அரசு மருத்துவமனையில் பணம் கேட்பதாகவும் ஏழையான தங்களால் அந்த பணத்தை செலுத்த முடியாத நிலை இருப்பதாகவும் கண்ணீர் மல்க வானதியிடம் தெரிவித்தார். இதையடுத்து வானதி நேராக அந்த குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவிற்கு சென்றார்.

மாஸ்க் அணிந்தபடியே சென்ற அவர் சம்பந்தப்பட்ட குழந்தைக்கு என்ன பிரச்சினை என கேட்டறிந்தார். அந்த குழந்தையின் தாய்க்கு ஏற்கெனவே 3 குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டனவாம். தற்போது 4 ஆவது முறையாக குழந்தை பிறந்துள்ள நிலையில் அந்த குழந்தைக்கு மரபணு சிகிச்சை அளிக்க வேண்டுமாம். அந்த சிகிச்சைக்கு பணம் செலுத்த வேண்டும். அது இலவசம் இல்லை என்றார்கள்.

அப்போது குழந்தைக்கு என்ன பிரச்சினை என சரியாக சொல்லுங்கள் என வானதி கேட்டார். பின்னர் அவருடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா இருந்தார். அவரும் வானதிக்கு விளக்கினார். அப்போது அந்த குழந்தையின் தாய் அங்கு வந்தார். அவர் வானதியை பார்த்தவுடன் அழுதார். உடனே வானதி அம்மா நீங்கள் அழாதீங்க.

பச்சிளம் குழந்தைக்கு பால் கொடுக்கும் பெண் நீ அழக் கூடாது. உன் பிரச்சினைகள் என்ன என்பது குறித்து வெளியே நின்றிருந்த உங்கள் அம்மா என்னிடம் சொல்லிவிட்டார் என்றார். அப்போது மருத்துவரிடம் இந்த குழந்தைக்கு இந்த சிகிச்சை கவர் ஆகாவிட்டால் இப்போது என்ன வழி என சொல்லுங்கள் என்றார் வானதி.

உடனே மருத்துவமனை முதல்வர் நிர்மலா, நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இதையடுத்து அந்த குழந்தையின் தாயிடம் கவலைப்படாதீங்க, நீங்கள் எந்த பணமும் கட்ட வேண்டாம். எல்லாத்தையும் டாக்டரம்மா பார்த்துக்குவாங்க என தைரியம் சொல்லிவிட்டு சென்றார். மேலும் வானதி இந்த ஆய்வை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

Vanathi Srinivasan helped a mother who struggles to save her 4th child after 3 died

அப்போது அவர் கூறுகையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சட்டசபை உறுப்பினர் நிதியிலிருந்து என்னென்ன வசதிகள் செய்ய முடியும் என்பதை ஆய்வு செய்தேன். பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் பெண்களுடன் வருவோருக்கு தங்குவதற்கு சரியான இடம் இல்லை என பொதுமக்கள் குறை கூறியுள்ளனர்.

இதற்கு எம்எல்ஏ நிதியிலிருந்து வசதி செய்து தரப்படும். மருத்துவமனை உணவகத்தில் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. பிரசவத்திற்கு வரும் பெண்களிடம் பணம் கேட்பதாகவும் கொடுக்காவிட்டால் அவர்களை சரியாக கவனிப்பதில்லை என்ற புகாரும் வந்துள்ளது. இது மருத்துவமனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+