சட்டசபை நேரலையில் நாங்கள் பேசுவது இருட்டடிப்பு! கேட்டால் தொழில்நுட்பக் கோளாறு என பதில் -வானதி
கோவை: சட்டசபை நேரலையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் பேசுவது இருட்டடிப்பு செய்யப்படுவதாக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Recommended Video
இது குறித்து தாங்கள் கேட்டால் தொழில்நுட்பக் கோளாறு என பதில் வருவதாக அவர் தெரிவித்தார்.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் கூறினார்.

மருத்துவ சேவை
புலியகுளம் பகுதியில் "நலம்" என்ற பெயரில் இலவச மருத்துவ சேவை முகாமை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் இன்று முதல் கோவை தெற்கு தொகுதியில் ஒவ்வொரு பகுதியிலும் இலவச மருத்துவ முகாமை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

நேரலையில் கட்
ஆளுங்கட்சிக்கு எந்த வித சங்கடங்கள் வர கூடாது என்பதில் சபாநாயகர் தெளிவாக இருப்பதாகவும் அங்கு தங்களால் முழுமையாக கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பில்லாமல் இருப்பதாகவும் கூறியதுடன் தாங்கள் பேசுவது நேரலையில் முழுமையாக வருவதில்லை எனவும் அதனை கேட்டால் தொழில்நுட்ப கோளாறு என்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார்.

ஒளிபரப்புக
சபை குறிப்பில் நீக்கம் தொடர்பான கருத்துகளை விட்டுவிட்டு அனைத்தையும் ஒளிப்பரப்ப வேண்டும் என வலியுறுத்திய வானதி சீனிவாசன், இலங்கைக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்பதை வரவேற்பதாகவும் அதே சமயம் முள்ளிவாய்க்களில் நடந்த சம்பவங்களுக்கு யார் காரணம் என்றும், அன்று நடந்த உயிரிழப்பு சம்பவங்களையும் நினைத்து பார்க்க வேண்டும் சுட்டிக்காட்டினார்.

தொழில் முனைவோர்
மேலும் ஒவ்வொரு பெண் தொழில் முனைவோரையும் தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனிடையே சட்டசபையில் பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் அடிக்கடி பேசுவது குறிப்பிடத்தக்கது. மேலும், அடிக்கடி பாஜக உறுப்பினர்கள் 4 பேரும் வெளிநடப்பு செய்வதும் குறிப்பிடத்தக்கது.
-
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications