கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்டது. பாஜக சிட்டிங் எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனக்கு கோவையில் ஒரு தோட்டமும், சென்னையில் ஒரு பிளாட்டும் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் கணவர் பெயரிலும் ஏராளமான சொத்துகள் உள்ளன.
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், இந்தமுறை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். வானதி சீனிவாசன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா மற்றும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைவுடன் சென்று அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

வானதி சொத்து
அவரின் சொத்துப்பட்டியல் விவரம் வெளியாகியுள்ளது. கடந்த 2021 தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டபோது வானதி சீனிவாசன், தன்னிடம் ரூ.1.13 கோடி மதிப்பிலான அசையும் சொத்து இருப்பதாகவும், ரூ.5.03 கோடி அசையா சொத்து இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது தன்னிடம் ரூ.2.16 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.3.50 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கணவர் பெயரிலும்
கடந்த தேர்தலின்போது ரூ.22 லட்சம் கடன் இருப்பதாகத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ரூ.83 லட்சம் கடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இனோவா, போக்ஸ்வேகன் என்று 2 கார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். 95 சவரன் தங்கம், வைர நகையும், ஒரு கிலோ வெள்ளியும், சட்டம் தொடர்பாக ரூ.2 லட்சம் மதிப்பிலான புத்தகங்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மாதம்பட்டி பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் விவசாய தோட்டம், சென்னை கிளாம்பாக்கத்தில் ரூ.3.5 கோடி மதிப்பிலான ஒரு பிளாட் ஆகியவை வானதிக்கு சொந்தமாக உள்ளன. கணவர் பெயரில் 2 இனோவா கார்கள், ரூ.7 லட்சம் மதிப்பிலான சட்ட புத்தகங்கள், ரூ.3.62 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள், மதுராந்தகத்தில் 78 சென்ட் நிலம், காந்திபுரத்தில் ரூ.4.5 கோடி மதிப்பில் ஒரு பிளாட் வீடு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications