வானதி சீனிவாசன் VS கனிமொழி.. கோவை பெண் டிரைவர் ஷர்மிளா டிஸ்மிஸ்க்கு கட்சி பாகுபாடு காரணமா? பின்னணி
கோவை: கோவை தனியார் பஸ்சில் டிரைவரான ஷர்மிளா இன்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் இயக்கிய பஸ்சில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஏற்கனவே பயணித்து பாராட்டிய நிலையில் இன்று திமுக எம்பி கனிமொழி சென்றார். இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் பின்னணியில் கட்சி பாகுபாடு உள்ளதா? என்பதற்கு விடை கிடைத்துள்ளது.
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவரது தந்தை பெயர் மகேஷ். இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். 24 வயது நிரம்பிய ஷர்மிளா டிப்ளமோ மருந்தாளுநர் படிப்பை முடித்தார். மேலும் டிரைவிங் நன்றாக கற்றுக்கொண்டார். தனது தந்தைக்கு உதவியாக ஆட்டோவும் ஓட்டினார்.

இதையடுத்து சமீபத்தில் அவர் தனியார் பஸ்சில் டிரைவராக பணிக்கு சேர்ந்தார். இதன்மூலம் கோவை மாநகரின் முதல் பெண் பஸ் டிரைவர் என்ற பெருமையை பெற்றார் கடந்த 3 மாதங்களாக பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். மேலும் ஷர்மிளா தமிழகம் முழுவதும் பிரபலமானார்.
ஷர்மிளா கோவை காந்திபுரம் - சோமனூர் தடத்தில் தனியார் பஸ்சை இயக்கி வந்தார். இவரை சந்தித்து பலரும் பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களில் மிகவும் அவர் பிரபலமானார். சமீபத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஷர்மிளாவை ஓட்டிய பஸ்சில் சிறிது தூரம் பயணித்து அவரை பாராட்டினார். இதன் தொடர்ச்சியாக இன்று திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி, ஷர்மிளா இயக்கிய தனியார் பஸ்சில் பயணித்தார்.
கனிமொழி எம்பி காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பயணித்ததோடு, ஷர்மிளாவை கட்டியணைத்து பாராட்டி கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கினார். அதன்பிறகு அடுத்து சிறிது நேரத்தில் ஷர்மிளா பஸ் டிரைவர் பணியில்இருந்து நீக்கப்பட்டுள்ளார். இன்று காலை கனிமொழி எம்பி பஸ்சில் பயணித்த சிறிது நேரத்தில் இந்த நடவடிக்கை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷர்மிளா பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு காரணங்கள் தற்போது பரவி வருகின்றன.
அதில் ஒன்று தான் கட்சி பாகுபாடு காரணமாக ஷர்மிளா பணி நீக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதாவது சமீபத்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பயணித்த போது பிரச்சனை எழாத நிலையில் கனிமொழி எம்பி சென்ற சிறிது நேரத்தில் ஷர்மிளா தனது பணியை இழந்துள்ளதால் இந்த விமர்சனம் எழுந்துள்ளது. இதுபற்றி ஷர்மிளாவிடம், ‛‛பணி நீக்கத்துக்கு கட்சி பாகுபாடு பார்ப்பதாக நினைக்கிறீர்களா?'' என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஷர்மிளா,‛‛அதுஎல்லாம் எனக்கு தெரியாது. எப்போது வேண்டுமானாலும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சொல்லு என உரிமையாளர் ஏற்கனவே சொல்லியிருந்தார். ஆனால் இன்று அவர் எனக்கு எதிராக பேசினார். இது எனக்கு சங்கடமாக இருந்தது. பொறுமையாக பேசவில்லை. இதனால் வேறு ஒன்றும் சொல்லாமல் வந்துவிட்டேன். ஆனால் கனிமொழி எம்பி வருவதாக அவர்களிடம் முன்கூட்டியே சொல்லியும், அதனை சொல்லவில்லை என திரும்ப திரும்ப கூறுகின்றனர். இதனால் வந்துவிட்டேன்'' என்றார்.
இதற்கிடையே ஷர்மிளாவை பணியில் இருந்து நீக்கியதாக கூறப்படும் தகவலை பஸ் உரிமையாளர் துரைக்கண்ணு மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛பஸ்சில் கனிமொழி எம்பி கண்டக்டர் டிக்கெட் கேட்டுள்ளார். அவர் தனது பணியை செய்துள்ளார். அதுபற்றி என்னிடம் புகார் அளிக்க ஷர்மிளா அவரது தந்தை மற்றும் இன்னொருவர் வந்தனர். நான் அவரை பணியை விட்டு நீக்கவில்லை. கண்டக்டருக்கும், அவருக்கும் இடையேயான பிரச்சனையில் தான் அவர் இப்படி செய்துள்ளார். கண்டக்டர் மன்னிப்பு கோரியும் அவர் கேட்கவில்லை. ஷர்மிளா விரும்பினால் மீண்டும் பணியில் சேரலாம்'' என்றார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications