இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை பெங்களூர் வந்தே பாரத் ரயில் செய்த மேஜிக்.. திகைப்பில் தெற்கு ரயில்வே

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் இருந்து தினசரி பெங்களூர் நகருக்கு அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டாலும் வந்தே பாரத் ரயில், 83 சதவீதம் இருக்கைகள் நிரம்பியே செல்கிறது. இந்த ரயிலை தினசரி காலை 6 மணிக்கு மேல் இயக்கினால் 100 சதவீதம் அளவிற்கு இருக்கைகள் நிரம்பும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை-பெங்களூர் இடையே கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் தினமும் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 11.30க்கு பெங்களூர் சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து மதியம் 1.40க்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு கோவை வந்தடைகிறது.

Vande Bharat Coimbatore : 83% occupancy for 5am train is quite impressive

இந்த ரயிலில் 478ஏசி சேர் கார்கள் இருக்கைகளாக உள்ளன. இந்த ஏசி சேர் கார் கட்டணம் பெங்களூர் நகரத்திற்கு 1025 ரூபாய் ஆக உள்ளது. 52 எக்ஸிகியூட்டிவ் சேர் கார்கள் உள்ளது. இதற்கு கட்டணமாக 1930 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கோவை பெங்களூர் வந்தே பாரத் ரயில் அதிகாலை 5 மணிக்கு புறப்படுவதால் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே காலை 6 மணிக்கு உதய் எக்ஸ்பிரஸ் செல்லும் நிலையில் இதனை அதிகாலை ஐந்து மணிக்கு இயக்கினால் மக்கள் எப்படி பேருந்துகளை அல்லது ஆட்டோவை பிடித்து எப்படி வருவார்கள் என்ற கேள்வி எழுந்தது. மேலும் அதிகாலையில் இயக்கப்படுவதால் வரவேற்பு கிடைக்குமா என்ற சந்தேகம் அதிகமாக இருந்தது.

ஆனால் நடந்தது என்னமோ வேறு. கோவை பெங்களூர் வந்தே பாரத் ரயிலில் பயணித்தவர்களின் ஒரு மாத விவரம் வெளியாகி உள்ளது.. இந்த ரயிலில் பெரும்பாலும் அதிக பயணிகளின் சென்று இருப்பது தெரியவந்துள்ளது. ஜனவரியில் 27 நாட்கள் இந்த ரயில் இயக்கப்பட்ட நிலையில கோவை பெங்களூரு ட்ரப்பில் மட்டும் சுமார் 12000 பேர் பயணித்துள்ளார்கள்.

இதில் 10745 பேர் ஏசி சேர்காரிலும்..1164 பேர் எக்ஸிகியூட்டிவ் சேர் காரிலும் பயணித்துள்ளார்கள். மொத்தமாக கணக்கிட்டு பார்த்தால் 83 சதவீதம் அளவிற்கு கோவை பெங்களூர் வந்தே பாரத் ரயில் இருக்கை நிரம்பி சென்றுள்ளது. இதன் மூலம் தெற்கு ரயில்வே பல லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே கோவையில் இருந்து தினமும் அதிகாலை 5 மணிக்கு புறப்படுவதற்கு பதில், கோவை மக்களின் கோரிக்கையை ஏற்று தினமும் அதிகாலை 6 மணிக்கு வந்தே பாரத் ரயிலை இயக்கினால், ரயில் இருக்கை 100 சதவீதம் நிரம்பும் என மக்கள் தெரிவித்தனர். மக்களுக்கு அதிகாலை 5 மணிக்கு கிளம்பி வருவது நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதை தெற்கு ரயில்வே உணர வேண்டும் என்றும். இந்த ரயிலை காலை 6 மணிக்கு மேல் இயக்குவதுடன், ரயிலின் வேகத்தை அதிகரித்து 5.30 மணி நேரமாக பயண நேரத்தை குறைக்க முடியும் என்றும் பயணிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+