"திருமாவளவனுக்கு சேலை கட்டுவேன்.. இது பாகிஸ்தான் இல்லை".. வேலூர் இப்ராஹிம் கொந்தளிப்பு
திருமாவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக வேலூர் இப்ராஹிம் அறிவித்துள்ளார்
கோவை: இந்து மதத்தை தொடர்ந்து இழிவுபடுத்தும், விசிக தலைவர் திருமாவளவனுக்கு சேலை கட்டுவேன்.. திருமாவளவன் கட்சியினர் எங்களை மாவட்டத்திற்குள் விடமாட்டேன் என்கின்றனர். இது பாரத தேசம், பாகிஸ்தான் இல்லை... எனது பிரச்சாரத்தை தொடங்குவேன்" என்று ஏகத்துவ ஜமாத்தின் தலைவர் வேலூர் இப்ராகிம் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வேலூர் இப்ராகிம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது இதுதான்:

"மத நல்லிணக்கம் தமிழ்நாட்டில் நீடித்து வருகிறது... ஆனால் 20 வருஷமாக இந்துக்கள், இஸ்லாமியர்கள் நல்லிணக்கத்திற்கு சில இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களும் திராவிட அரசியலும் சிதைக்கும் வகையில் ஏற்படுத்துகிறது.
நான் பிரதமரின் திட்டங்களை ஆதரிக்கிறேன்... அதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறேன். இதற்காகவே இஸ்லாமியர்களுக்கு எதிரானவராக என்னை சித்தரிக்கிறார்கள்.. இந்து மதத்தை இழிவுபடுத்தி விட்டு, பிற மதங்களை புகழ்ந்து திருமாவளவன் பேசுகிறார்...
மத நல்லிணக்கத்தை நாங்கள் முன்னெடுக்கும் போது, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்துக்களுக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்... பெரியார் செய்த காரியத்தைத்தான் திருமாவளவனும் செய்கிறார்.
இஸ்லாமிய அமைப்பான எஸ்டிபிஐ மத வெறித்தனத்தை வெளிப்படுத்தி வருகிறது... இதுபோன்ற அமைப்புகளோடு திருமாவளவன் கொஞ்சுகிறார்... இந்து மதத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவது போல், இஸ்லாமிய அமைப்புகள் செய்யும் தவறுகளையும் தட்டிக் கேட்க வேண்டும். இனியும் இதனை செய்தால் திருமாவளவனுக்கு சேலை கட்டும் போராட்டம் நடத்தப்படும்.
திருமாவளவன் கட்சியினர் எங்களை மாவட்டத்திற்குள் விடமாட்டேன் என்கின்றனர். இது பாரத தேசம், பாகிஸ்தான் இல்லை... எனது பிரச்சாரத்தை தொடங்குவேன்.. எனது பிரச்சாரம் மத நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். மத்திய அரசின் பல திட்டங்களை அதிமுக ஆதரித்துள்ளது. ஆனால், அனைத்து திட்டங்களையும் ஸ்டாலின் எதிர்க்கிறார்... வெறும் அரசியல் லாபத்திற்காகச் செய்கின்றனர்.
வாக்குவங்கிக்காக இவர்கள் மோசமான அரசியல் செய்கின்றனர் என்பதை இஸ்லாமிய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்... திராவிட அரசியல் என்பது மக்களை போலியான தவறான முறையில் வாக்குறுதிகளை அளித்து, தமிழகத்தில் தேச நலனைப் பற்றி பேசுபவர்களை நகைச்சுவையாளராக மாற்றியுள்ளனர். தமிழகத்தில் தேசியத்தை மையப்படுத்தும் ஆட்சி வர வேண்டும். திமுகவை ஒழிக்க வேண்டும் என்றால் அதிமுகவுடனான கூட்டணி மட்டுமே சாத்தியமாகும். வரும் காலங்களில் பாஜக தமிழகத்தில் சொந்தக்காலில் நிற்கும்" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications