வானதி ஆடிய டான்ஸ்.. முகமெல்லாம் சிரிப்பு.. மலைத்து பார்த்த கோயம்புத்தூர்!
கோவை: கேரள பெண்கள் மற்றும் பாஜகவினருடன் இணைந்து கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் நடனம் ஆடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.வானதி சீனிவாசன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய வீடியோ வேகமாக பரவி வருகிறது.
கேரள மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பாதாள லோகத்தை ஆளும் மகாபலி சக்கரவர்த்தி ஓணம் திருநாளில் பூவுலகுக்கு வருவதாக ஐதீகம்.
அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். தங்களை காண வரும் மகாபலி மன்னனுக்காக அத்தப்பூ கோலம் போட்டு வீடுகளை அலங்கரித்து விளக்கேற்றி மலையாள மக்கள் வரவேற்பு அளிப்பார்கள்.
கேரளாவில் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இன்று தான் திருவோணம் நட்சத்திரம் வரும் நாளாகும்.திருவோணம் நட்சத்திரம் வரும் நாளில் மக்கள் உற்சாகமாக ஓணம் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

அந்த வகையில் கேரளா , தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி உள்பட மலையாள மொழி பேசும் மக்கள் அனைவரும் ஓணம் பண்டிகையை இன்று உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
கோவை பீளமேடு பகுதியில் பாஜக மகளிர் அணி கோவை மாவட்ட தலைவர் ஜெயஸ்ரீ வீட்டு வளாகத்தில் ஓணம் பண்டிக்கை கொண்டாடப்பட்டது. இதில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு முகமெல்லாம் புன்னகையுடன் நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.
கேரள பராம்பரிய உடைந்து ஓணத்திற்கான பாடல் ஒலிக்க பாரம்பரிய முறைப்படி வானதி சீனிவாசன் பெண்களுடன் நடனம் ஆடினார்-இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவை பீளமேட்டில் பாஜக பெண் நிர்வாகி இல்லத்தில் நடைபெற்ற ஒணம் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பெண்களுடன் நடனம் ஆடினார்...#Onam #bjp #Coimbatore pic.twitter.com/ZHEBbdAZK1
— கார்த்திக் சதிஸ்குமார் (@kovaikarthee) August 29, 2023
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications