நாங்களும் கோயம்புத்தூர்காரங்கதான்.. கோவை-அபுதாபி விமான கேப்டன்களின் வீடியோ வைரல்
கோவை: கோவை - அபுதாபி இடையே நேற்று முதல் விமானப் போக்குவரத்து துவங்கியுள்ளது. விமானம் கோவையில் இருந்து அபுதாபி புறப்படும் முன்பு, விமானத்தின் கேப்டன்கள் நாங்கள் இருவரும் கோயம்புத்தூர் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது என்று தமிழில் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.
கோவையில் இருந்து சிங்கப்பூர் மற்றும் சார்ஜா ஆகிய நாடுகளுக்கு விமானப் போக்குவரத்து இருந்து வருகிறது. இதேபோல மற்ற நாடுகளுக்கும் விமான போக்குவரத்து கோவையில் இருந்து துவங்கப்பட வேண்டும் என்று நீண்டநாள்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை - அபிதாபி இடையே நேற்று முதல் விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. அபுதாபியில் இருந்து கோவைக்கு நேற்று காலை 163 பயணிகளுடன் இன்டிகோ விமானம் வந்தது. இந்த விமானத்துக்கு கோவை விமான நிலைய தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, காலை 7.40 மணியளவில் இண்டிகோ விமானம் கோவை விமான நிலையத்தில் இருத்து அபுதாபிக்கு தனது விமான சேவையை இயக்கியது. கோவையில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்கள் விமான சேவையானது வழங்கப்பட உள்ளது. இந்த விமான சேவை தொழில் துறையினர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோவை விமான நிலையத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் இண்டிகோ விமானம் பிற்பகல் 11.30 மணிக்கு அபுதாபி சென்றடையும். அபுதாபியில் பிற்பகல் 1 மணிக்கு கிளம்பும் இண்டிகோ விமானம் மாலை 6.30 மணிக்கு கோவை வந்தடையும். புதிதாக தொடங்கப்பட்டுள்ள கோவை - அபுதாபி நேரடி விமான சேவை மூலம் வியாபாரத்திற்காக அபுதாபிக்குச் செல்லும் தொழில் துறையினர் மிகுந்த பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சில நாடுகளுக்கும் கோவையில் இருந்து விமானங்களை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விமான நிலைய விரிவாக்கத்திற்குப் பின்னர் வரவேற்பைப் பொறுத்து மேலும் சில நாடுகளுக்கும் விமான சேவை விரிவுபடுத்தப்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், விமானம் கோவையில் இருந்து அபுதாபி புறப்படும் முன்பு கேப்டன் விவேக் கந்தசாமி, துணை கேப்டன் வினோத் குமார் சந்திரன் ஆகியோர் பேசினர். அப்போது, "நாங்கள் இருவரும் கோயம்புத்தூர் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது" என்று தமிழில் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications