ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சொன்னது உண்மை.. சீமானிடம் பணம் கொடுத்து ஏமாந்தோம்.. கொளத்தூர் மணி ஓபன் டாக்!
கோவை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உடன் எடுத்து கொண்ட புகைப்படம் போலியானது என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் மற்றும் சீமான் இடையிலான உறவு குறித்து தொடர்ச்சியாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமல்லாமல் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில், மனநோய் வந்தவர்கள் அடுத்த என்ன செய்வார்கள் என்று தெரியாது. சீமான் சொன்ன உணவு செய்திகள் எல்லாம் பொய் என்பது அனைவருக்கும் தெரியும்.

கரும்புலி என்று சீமான் சொன்னதை நம்பி பணத்தை கொடுத்து ஏமாந்தது உண்மை தான். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சொல்வது உண்மையே. ஏனென்றால் சீமான் படப்பிடிப்புக்காக அழைக்கப்பட்டவர் இல்லை. இருந்தாலும் நம் இயக்க மேடைகளில் பேசியவர் என்பதால் சீமானை நம்பி தொலைத்துவிட்டோம். ஈழ விடுதலை வரலாற்றை அறியாதவர்கள் பலரும் ஏமாற தொடங்கிவிட்டார்கள் என்பதால் சீமானுக்கு பொய் சொல்வதற்கான துணிச்சலை கொடுக்கிறது.
2009 போர் முடிவடைந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழிந்துவிட்டது. விடுதலை போராட்டத்தில் கூட அத்தனை பேரும் கலந்து கொள்ளவில்லை. போர் நடக்கிறது என்பதால் உயிருக்கு ஆபத்து என்று சென்றவர்கள் ஏராளம். அதன்பின் போரில் ஈடுபட்டவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூலி வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். பணம் வைத்திருந்தவர்கள் பலரும் முன்பே வெளியேறி சென்றுவிட்டார்கள்.
பெரியார் மீதான கொச்சைப் பேச்சிற்கு தேர்தல் முடிவடைந்த பின் தான் எதிர்வினைகள் இருக்கும். தேர்தலின் போது சிக்கல் இருக்க கூடாது என்பதால் பெரியாரிய இயக்கங்களின் எதிர்வினைகள் அளவுடன் இருக்கிறது. இந்த இடைத்தேர்தலுக்கு பின் 3வது பெரிய கட்சி என்று சொல்லுவார். களத்திலேயே 2 கட்சிகள் தான் இருக்கிறார்கள்.
அதனால் 3 கட்சிகள் போட்டியிட்டு 3வது இடத்தை பிடித்தால், அது ஒன்றுமில்லாத கட்சி என்றே அர்த்தம். திமுக, அதிமுக வாங்கிய கோடிக்கணக்கான வாக்குகளுக்கும், நாம் தமிழர் பெற்ற 30 லட்சம் வாக்குகளுக்கும் வித்தியாசம் உள்ளது. ஏற்கனவே அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணித்துவிட்டன. அதனால் அந்த கட்சிகளின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என்று சீமான் நம்புகிறார்.
பெரியாரை கடுமையாக விமர்சித்துவிட்டு ஈரோட்டிலேயே இவ்வளவு வாக்குகளை பெற்றுவிட்டோம் என்று நிறுவுவதே நோக்கமாக உள்ளது. பரப்புரையின் தினமும் பெரியாரை விமர்சித்து கொண்டே இருக்கிறார். அதற்கு யாராவது வந்து நம்மை அடிக்க மாட்டார்களா, அதன் மூலம் அனுதாப வாக்குகள் கிடைக்காதா என்ற ஆசையில் இருக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications