செந்தில் பாலாஜி இல்லாமலே.. ஜெயித்து காட்டுவோம்! திமுக எடுத்த "பிரம்மாஸ்திரம்".. அண்ணாமலைக்கு சிக்கல்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோவையில் செந்தில் பாலாஜி இல்லாமலே வெற்றிபெறுவோம்.. அவரை நீங்கள் சிறையில் போட்டுவிட்டீர்கள். அதனால் எங்கள் கட்சி தோல்வி அடையும் என்று நினைக்க வேண்டாம் என்று நிரூபிக்க திமுக நினைக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.,

கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

We will win without Senthil Balaji What is DMk plan against Coimbatore seat against Annamalai

பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். முக்கியமாக டாக்டர் மகேந்திரன் உட்பட பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்தது. கடைசியில் கணபதி ராஜ்குமார் தேர்வாகி உள்ளார். அதேபோல் அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

ராமச்சந்திரன் கோவிந்தராசு என்றும் அழைக்கப்படும் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அந்த கட்சியின் சர்ப்ரைஸ் தேர்வாகி மாறி உள்ளார். அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளராக பணியாற்றிய இவர், மார்ச் 2016ல் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் அந்த பதவியில் நியமிக்கப்பட்டார். தற்போது அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவராக உள்ளார்.

கோவை நிலவரம்; கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கே கடந்த தேர்தலில் கட்சிகள் வாங்கிய வாக்கு சதவிகிதம் எவ்வளவு என்று பார்க்கலாம்.

2019 பொதுத் தேர்தல். கோவையில் அதிமுக + பாஜக + பாமக +தேமுதிக + தமிழ் மாநில காங்கிரஸ் சேர்ந்து வாங்கிய வாக்குகள் 31% மட்டுமே. திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வாங்கியது 46%. இப்போது திமுக கூட்டணி அப்படியே உள்ளது.

ஆனால் பாஜக கூட்டணியில் அதிமுக , தேமுதிக இல்லை. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையம் சேர்ந்திருக்கு. இவர்களிடம் 11% வாக்கு வேறு கோவையில் உள்ளது. அப்படி இருக்க அண்ணாமலைக்கு கோவை களநிலவரம் சாதகமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எப்படி இருக்கும்?: இந்த நிலையில் கோவையில் நிலவரம் எப்படி இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில்., கோவையில் கடந்த முறை சிபிஎம் வென்றது. அங்கே செந்தில் பாலாஜி திமுகவை வேகமாக வளர்த்து வருகிறார். ஆனால் அவரை சிறைக்கு அனுப்பிவிட்டனர். திமுக அங்கே வேகமாக வளர்ந்து வருகிறது. அதனால்தான் அங்கே மாநகராட்சி தேர்தலில் கூட திமுக வென்றது. திமுக என்கிற கட்சிக்கு மாநகராட்சி தேர்தலில் நல்ல வாக்கு கிடைத்தது.

அதிமுக, பாஜக வலுவாக இருந்தால் அங்கே மாநகராட்சி தேர்தலில் ஒன்றிலாவது வென்று இருக்க வேண்டுமே? ஏன் இல்லை. இதை திமுக பார்க்கிறது. அதனால்தான் கோவையில் நேரடியாக களமிறங்குகிறது. சேலத்திலும், களமிறங்குகிறது. பொள்ளாச்சியிலும் மீண்டும் களமிறங்கி உள்ளனர். கோவையில் செந்தில் பாலாஜி இல்லாமலே வெற்றிபெறுவோம்.. அவரை நீங்கள் சிறையில் போட்டுவிட்டீர்கள். அதனால் எங்கள் கட்சி தோல்வி அடையும் என்று நினைக்க வேண்டாம்.

அவர் இல்லாமலே நாங்கள் வெற்றிபெற்று காட்டுவோம். அவர் இல்லாமலே நாங்கள் வெற்றிபெற்று காட்டுவோம் என்று நிரூபிக்கவே இங்கே களமிறங்கி உள்ளனர் . முக்கியமாக அங்கே ஒரு ஜாதியின் வாக்குகள் அதிமுக - பாஜக இடையே பிரியும். இந்த நிலையில் தலித் வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள், கேரளாவில் இருந்து வந்தவர்களின் வாக்குகள், அந்த குறிப்பிட்ட ஜாதிக்கு வெளியே இருக்கும் வாக்குகள் மூலம் வெல்ல முடியும் என்று நினைக்கிறார்கள்.

அதனால் அங்கே என்ன நடக்க போகிறது என்று பார்க்கலாம், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+