மாட்டுக்கறி திமிர் என சொல்லி முஸ்லிம் மாணவியிடம் ஷூ துடைக்க சொன்ன ஆசிரியர்! வெல்ஃபேர் கட்சி கண்டனம்
சென்னை: கோவை அரசு பள்ளியில் மாட்டுக்கறி சாப்பிடுவதாக கூறி மாணவியை இழிவுபடுத்திய ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியா வலியுறுத்தி இருக்கிறது.
கோவையை சேர்ந்தவர் முக்தார். இவரது மகள் துடியலூர் என்.ஜி.ஓ. நகர் அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். இவர் மாட்டுக்கறி சாப்பிடுவதாக கூறி பள்ளி ஆசிரியர்கள் அபிநயா மற்றும் ராஜ்குமார் ஆகியோர் துன்புறுத்தியதாக அவரது பெற்றோர் அளித்து உள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவியிடம் ஆசிரியர்கள், “நீ மாட்டுக்கறி சாப்பிடுவியா, அப்படியென்றால் உனக்கு திமிர் அதிகமாக இருக்கும்.” என்று கூறி அவர் அணிந்திருந்த பர்தா மூலம் ஷூவை துடைக்க வைத்ததாக மாணவியின் பெற்றொர் தெரிவித்து உள்ளனர்.

ஆசிரியர் ராஜ்குமார், மாணவியை வாடி போடி என்று ஒருமையில் அழைத்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மிரட்டியதாக கூறப்படுகிறது. தீபாவளி விடுமுறை முடிந்து மாணவி பள்ளிக்கு சென்றபோதும் ஆசிரியர்கள் அபிநயாவும் ராஜ்குமாரும் சேர்ந்து மாணவி மாட்டுக்கறி சாப்பிடுவதை அனைவர் முன்னிலையிலும் சுட்டிக்காட்டி தகாத வார்த்தைகளில் திட்டியதாக முக்தார் புகாரளித்து உள்ளார். இது தொடர்பாக தலைமை ஆசிரியரும் நடவடிக்கை எடுக்காத நிலையில் தங்களுக்கு நியாயம் வேண்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு சென்று புகார் மனு அளித்து உள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இதற்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் அப்துல் ரஹ்மான் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “மாட்டுக்கறியின் பெயரால் மாணவியை இழிவுபடுத்திய செயல் தமிழ்நாட்டில் பரவி வரும் இஸ்லாமாஃபோபியா வின் அடையாளமாகும்.
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் முஸ்லிம் மாணவிகளின் மீது மாட்டுக் கறியின் பெயரைச் சொல்லி கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் அருவருக்கத்தக்கதாகும். ஆசிரியர்களின் இஸ்லாமாபோபியா நடவடிக்கைக்கு பள்ளியின் தலைமை ஆசிரியரும் துணை போய் இருப்பது கண்டனத்திற்குரியதாகும். அபத்தமாகவும் வெற்றுத்தனமாகவும் திராவிட அரசியல் பேசித்திரியாமல் இந்துத்துவத்துக்கு எதிராக அம்பேத்கரும், பெரியாரும் கட்டுக் கதைகளை கட்டுடைத்தது போல் மாட்டுக்கறி அரசியலையும் எதிர்கொள்ள வேண்டும்.
அதிகரித்து வரும் இஸ்லாமாஃபோபியா செயல்பாடுகளை கருத்தியல் ரீதியாக மட்டுமின்றி சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதற்காக வெல்ஃபேர் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரும் முஸ்லிம் உரிமைகள் பாதுகாப்புச் ( MRP ) சட்டத்தை உடனடியாக சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications