இதுமட்டும் நடக்கலைனா.. கோவைக்கு பெரிய சிக்கலாக மாறிவிடும்.. இந்த 4 விஷயம்.. ரொம்ப முக்கியம்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர் வேகமாக முன்னேறி வருகிறது. தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நகரமாக கோவை வளர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் கோவைக்கு முக்கியமான சில திட்டங்கள் அவசியம் ஆகின்றன.

எதிர்காலத்தில் பல பெரிய நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டும் என்றால் கோவைக்கு 4 முக்கியமான திட்டங்கள் அவசியம் ஆகின்றன.

What are the 4 major infrastructer projects that Coimbatore needs urgently?

1. மெட்ரோ: கோயம்புத்தூருக்கு அமைக்கப்பட உள்ள முழுமையான டிபிஆர் ரிப்போர்ட் அளிக்கப்பட்ட பின்பும் அங்கே பணிகளை தொடங்க அரசு இன்னும் அனுமதிக்கவில்லை. சென்னை மெட்ரோ 2.0 திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால் முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் பணத்தில்தான் கடன் வாங்கி திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்படி இருக்க போதிய நிதி இல்லாத காரணத்தால் இந்த இரண்டு திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. சென்னை மெட்ரோவிற்கு நிதியை மத்திய அரசு கொடுத்தால் கோவை, மதுரை மெட்ரோ மீது தண்டு அரசு கவனம் செலுத்த முடியும்.

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் மதுரை மற்றும் கோயம்புத்தூருக்கு மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்பட உள்ளன.

கோவை மெட்ரோ: இந்த நிலையில் கோவையில் மெட்ரோ பணிகள் இந்த வருடமே தொடங்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவையில் 5 இடங்களை மையமாக வைத்து மெட்ரோ பணிகள் நடக்க உள்ளன. அவினாசி சாலை கணியூர் வரையில்தான் முதல் கட்டமாக இந்த திட்டம் கொண்டு வரப்படும்.

அவினாசி சாலை, திருச்சி சாலை வழியாக மெட்ரோ பாதை. சத்தி சாலை, சிறுவாணி சாலை வழியாக மெட்ரோ பாதை. மேட்டுப்பாளையம் சாலைகள் வழியாக மெட்ரோ பாதைகளை அமைக்க முடிவு செய்துள்ளனர், மொத்தமாக 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

சென்னையில் இருப்பது போலவே அதே வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டம் 3 கட்டங்களாக கொண்டு வரப்பட உள்ளது. சத்தி சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரை முதல் கட்ட பணியின் இறுதியில் மெட்ரோ அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கோவையில் மெட்ரோ லைட் திட்டத்திற்கு பதிலாக வழக்கமான மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மெட்ரோ லைட் என்றால் மெதுவாக செல்லும், குறைந்த பெட்டிகள் இருக்கும். ஆனால் கோவை மெட்ரோ சென்னை மெட்ரோ போலவே முழு மெட்ரோவாக செயல்படும்.

முதலில் கோவையில் மெட்ரோ லைட் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் எடுத்த ஆலோசனையின் முடிவில் இதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தொழில்நகரமான கோவை நகரின் வளர்ச்சியையும், முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு மெட்ரோ லைட் திட்டத்திற்குப் பதிலாக வழக்கமான மெட்ரோ ரயில் திட்டமே செயல்படுத்தப்பட முடிவுசெய்யப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய அரசின் நிதி காரணமாக இந்த திட்டம் இன்னும் செய்லபடுத்தப்படவில்லை.

2. விரைவு சாலை: பெருநகரமான் கோவைக்கு என்று விரைவு சாலைகள் இல்லை. கோவையை இணைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ் வே கட்டப்படுவது மிக அவசியம் ஆகிறது.

3., திருச்சிக்கு சமீபத்தில் சர்வதேச விமான முனையம் பெரிதாக அமைக்கப்பட்டது. அதேபோல் கோவைக்கு பெரிய முனையம் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

4. கோவையில் ஐடி நிறுவனங்கள் அடுத்தடுத்து அமைகின்றன. ஆனாலும் அங்கே சிப்காட் முறையாக அமைக்கப்படவில்லை. கோவைக்கு என்று கோவை சார்ந்த தொழில்களை மையப்படுத்தி பிரம்மாண்ட சிப்காட் அமைக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+