கோவை ஐடி கம்பெனியில் நினைத்தே பார்க்க முடியாத சம்பவம்.. ஒரே நாளில் நடுத்தெருவில்.. ஊழியர்கள் பேட்டி
கோவை: கோவை ஆர்எஸ் புரத்தில் இயங்கி வந்த ஃபோக்கெஸ் எடுமாட்டிக்ஸ் என்ற நிறுவனம் பன்னாட்டு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் அமெரிக்காவிலும், சென்னையிலும் இருக்கிறது. இந்த நிறுவனம் 15 வருடங்களுக்கு மேலாக உள்ள நிறுவனம் ஆகும். கோவையில் பணியாற்றும் நிறுவன ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் கொடுத்த நிறுவனம், திடீரென கம்பெனியை நிரந்தரமாக மூடியது. இதனால் ஊழியர்கள் எங்கு வேலைக்கு செல்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
கோவை ஆர்எஸ் புரத்தில் இயங்கி வந்த ஃபோக்கெஸ் எடுமாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நந்தகுமார் என்ற ஊழியர் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், என் பெயர் நந்தகுமார். நான் குவாலிட்டி டிபார்ட்மெண்டில் வேலை செய்து வந்தேன். இந்த கம்பெனி பார்த்தீர்கள் என்றால், 2010ம் ஆண்டு ஆரம்பித்தது. 15 வருடங்களாக இயங்கி வருகிறது. திடீரென கடந்த வெள்ளிக்கிழமை எங்களுக்கு ஒரு கால் வந்தது.. மதியம் 12 மணி வரை ஐடி சர்வீஸ்க்காக shutdown பண்றோம் என்று சொல்லித்தான் ஆரம்பித்தார்கள்..

வொர்க்ஃபுரம் எடுத்துக்கொள்ளுங்கள்.. இல்லை என்றால் லீவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.. இதனால் எல்லாருமே வீட்டிற்கு போய் வேலை செய்தோம்.. சனி மற்றும் ஞாயிறு எப்போதுமே லீவு தான்.. அதற்கு பிளான் பண்ணி நாங்கள் ஊருக்கு போயிருந்தோம்..
ஆனால் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தார்கள்.. அவசர மீட்டிங் என்று கூறி ஏற்பாடு செய்திருந்திருக்கிறார்கள். அதன்பிறகு 9.15க்கு மெயில் வருகிறது.. உடனடியாக நிறுவனம் shutdown செய்யப்படுவதாக கூறினார்கள். அதாது கோவையில் உள்ள ஃபோக்கெஸ் எடுமாட்டிக்ஸ் நிறுவனக்கிளை ஒரே நாளில் நிரந்தரமாக மூடப்படுவதாக மெயில் வந்தது.. கோவையில் உள்ள எல்லா ஊழியர்களும் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் கூறினார்கள்.. '
எங்களுக்கு ஒரே நாளில் வேலை போய்விட்டது.. அந்த நிறுவனம் எங்களுக்கு அணுபவ சான்றிதழ், சம்பளம், கிராஜூவிட்டி, மெர்டனிடிட்டி லீவில் உள்ளவர்களுக்கு சம்பளம் என எதுவுமே வரவில்லை.. ஹெச்ஆர் ஒன்ற பெயரில் அவர்களுக்கு சாதகமாக அப்ளிகேசன் ஒன்று உள்ளது. அதில் வேலை செய்யும் ஊழியர்கள் எல்லாம் தலைமறைவாகிவிட்டதாக கூறியிருக்கிறார்கள்.. நாங்கள் தலைமறைவாகவில்லை. வெள்ளிக்கிழமை வரை ஒன்றாகவே வேலை செய்தோம்..
சட்டப்படி நிறுவனத்தை மூடுவதாக இருந்தால் 3 மாதம் முன்பே எடுத்திருக்க வேண்டும். முறையாக நோட்டீஸ் தர வேண்டும்.. ஊழியர்களுக்கு ஊதியம் உள்பட அனைத்து விஷயங்களையும் சரியாக தந்திருக்க வேண்டும்.. எதுவுமே இல்லாமல் ஒரே நாளில் மூடிவிட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.. ஒன்றாம் தேதி சம்பளம் வரும் என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் நிலைமையை நினைத்தால் தான் கவலையாக உள்ளது என்றார்.
ஒட்டுமொத்தமாக சென்னை, கோவை, பெங்களூர் என 2000 ஊழியர்கள் வேலையை இழந்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். லோன், இஎம்ஐ என எல்லாமே இந்த நிறுவனத்தை நம்பி வாங்கியவர்கள் இனி என செய்ய போகிறோம் என்ற வருத்ததில் உள்ளார்கள்.. இதுபற்றி எல்லா ஊழியர்களும் தங்கள் வருத்ததை பதிவு செய்து வருகிறார்கள். ஐடி நிறுவனம் குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்கள்.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications