"வெட்டிடுவாங்க.. காப்பாத்துங்க".. நடுரோட்டில் அலறிய ஜோடி.. விழித்த மக்கள்.. ஆக்ஷனில் காக்கி சட்டை
கோவை ரோட்டில் அலறிய காதல் ஜோடிக்கு போலீசார் பாதுகாப்பு தந்துள்ளனர்
கோவை: கோவையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடியை, கடத்தி கொலை செய்ய முயன்ற விவகாரத்தில் பெண்ணின் அப்பா, மற்றும் தாய் மாமன் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிக்னலில் நின்ற காரில் இருந்து இளம் காதல் ஜோடி இறங்கி, தங்களை காப்பாற்ற சொல்லி அலறிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை - அவிநாசி ரோடிலுள்ள லட்சுமி மில்ஸ் சிக்னல் பகுதி, எப்போதுமே பிஸியாக இயங்கி கொண்டிருக்கும்..

பிரதான சாலை
அப்படித்தான், நேற்று முன்தினம் இரவும் சுமார் 9 மணியளவில், வாகனங்கள் சென்று கொண்டிருந்துள்ளன... மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருந்துள்ளது. அப்போது அந்த பிரதான சாலையில் சிக்னல் போட்டுவிட்டதால், வாகனங்கள் வரிசை கட்டி நின்றுள்ளது.. அந்த நேரம் பார்த்து வேகமாக ஒரு கார் வந்துள்ளது.. அந்த காரில் இருந்துதான் அலறல் குரல் கேட்டது.. இதனால் அங்கிருந்த மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்தனர்...

அலறல்
குறிப்பிட்ட காருக்குள் இருந்துதான் அலறல் வருகிறது என்பதையும் யூகித்து கொண்டாலும், அவர்களால் அந்த நேரம் எதுவுமே செய்ய முடியவில்லை.. அடுத்த சில நிமிடங்களில், காரில் இருந்து ஒரு காதல் ஜோடி வெளியே இறங்க முயற்சி செய்தது.. அதற்குள் காரை சுற்றி மற்ற வாகன ஓட்டிகள் வந்து விட்டனர். அப்போது, காரில் இருந்து இறங்கிய ஜோடி, அங்கே நிற்காமல், வேகமாக நடுரோட்டிலேயே ஓட ஆரம்பித்துள்ளது.. ஒருகட்டத்துக்கு மேல் ஓட முடியாமல், சிக்னல் அருகில் ரோட்டோரமாக தடுமாறி உட்கார்ந்துவிட்டது..

வாகன ஓட்டிகள்
"எங்களை காப்பாத்துங்க.. வெட்டிருவாங்க.." என்று பயந்து கொண்டே அலறினார்கள்.. ஏதோ ஆபத்து என்பதை மட்டும் புரிந்து கொண்ட வாகன ஓட்டிகள், அவர்களை சுற்றி வளைத்து பாதுகாப்பாய் நின்று கொண்டனர்.. அப்போது அவர்களிடம் நாங்க 2 பேரும் லவ் பண்றோம்.. எங்களை வீடுகளில் பிரிக்க பார்க்கறாங்க.. எங்களை மிரட்டுறாங்க.. எப்படியாவது எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று அழுதுகொண்டே கெஞ்சினர்.. இருவருமே கதறி கதறி அழுதனர்..

பொதுமக்கள்
இதனால் பொதுமக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்த நேரத்தில், டிராபிக் போலீஸ் ஒருவர் வந்தார்.. அவர் காலிலும் விழுந்து காப்பாற்ற சொல்லி காதல் ஜோடி கதறியது.. உடனடியாக அவர் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கொடுக்கவும், அவர்கள் விரைந்து வந்தனர்... காதல் ஜோடியிடம் விசாரணையும் மேற்கொண்டனர். அந்த இளைஞர் மணியகாரம்பாளைத்தை சேர்ந்தவராம்.. பெயர் விக்னேஸ்வரர், 22 வயதாகிறது..

இளம்பெண்
இளம்பெண் 19 வயது சினேகா சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தராம்.. வீட்டை விட்டு ஓடிவந்து கடந்த 1-ம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.. உடனடியாக இருவரும் பாதுகாப்பு கேட்டு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இருதரப்பினரையும் காவல்துறையினர் பேசி சமாதானப்படுத்தி அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்களை சேர்த்து வைப்பதாக சொல்லி, பெண்ணின் தந்தை ஒரு கார் எடுத்து கொண்டு வந்து, இந்த ஜோடியை தேனிக்கு கடத்தி செல்ல அவர் முயன்றுள்ளார்.. இந்த விஷயம் தெரிந்து அதனாலேயே காரில் இருந்து தப்பி ஓடிவந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது..

வழக்கு பதிவு
கார் மட்டும் அந்த சிக்னலில் நிற்காவிட்டால், தங்களை எப்படியாவது கடத்தி கொன்றுவிடுவார்கள் என்று காதலர்கள் அழுது கொண்டே சொன்னார்கள்.. இறுதியில் அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.. இறதியில், சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சினேகா அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் 294 பி, 323, 506 (1) ஆகிய பிரிவுகளில் சினேகாவின் தந்தை ஆறுமுகசாமி, தாய்மாமன் ரமேஷ், பெரியப்பா மகன் முனியசாமி, மற்றும் அமுல் என்பவர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
கோயம்புத்தூர் மக்களுக்கு குட்நியூல்.. அமைச்சர் விக்னேஷ் அதிரடி நடவடிக்கை! -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications