கோவை காரமடை கலாமணி.. குழந்தையை உடலில் கட்டிக்கொண்டு கிணற்றுக்கு ஓடி.. விபரீத முடிவு
கோவை: காரமடை அருகே குழந்தையை உடலில் கட்டிக் கொண்டு கிணற்றுக்கு ஓடியிருக்கிறார் இளம் பெண்.. இந்த முட்டாள்தனமான செயலால் என்னாச்சு தெரியுமா? எவ்வளவு மனஅழுத்தம் இருந்தாலும் இதுபோன்ற செயல்களை ஒருபோதும் யாரும் செய்யவே கூடாது.
கோவை மாவட்டம் காரமடை அருகே பெள்ளாதி கிராமத்தை சேர்ந்த 31 வயதாகும் சந்தோஷ் என்பவர் மத்தம்பாளையத்தில் சைக்கிள் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கலாமணிக்கு 28 வயது ஆகிறது. இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டரை வயதில் அஸ்விக்கா என்ற மகள் உள்ளார்.

சந்தோஷ் நேற்று காலை தங்களுடைய தோட்டத்துக்கு சென்று விட்டார். அப்போது அவரது மனைவி கலாமணி தனது மகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றிருக்கிறார். அதன்பிறகு அவர் திரும்பி வரவே இல்லை. குழந்தையுடன் வெளியே சென்ற மனைவி நீண்ட நேரம் வீடு திரும்பாததை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் தனது உறவினர்களுடன் பல இடங்களுக்கு சென்று தேடிப்பார்த்துள்ளார். ஆனால் கலாமணியும் குழந்தையும் கிடைக்க வில்லை. ஒரு கட்டத்தில் பதற்றம் அடைந்த சந்தோஷ் நேரடியாக காரமடை போலீசில் சென்று தனது மனைவி குழந்தையுடன் காணாமல் போனது குறித்து புகார் செய்தனர்.
இந்த நிலையில் மதியம் 2 மணி அளவில் வீட்டின் அருகே இருந்த கிணற்றின் ஓரத்தில் கலாமணியின் செருப்பு ஒன்று கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தனர். அங்கு கலாமணி மற்றும் குழந்தை அஸ்விக்கா ஆகியோர் பிணமாக மிதப்பதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்கள்.
இது குறித்த உடனடியாக காரமடை போலீசார் மற்றும் மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கிணற்றில் பிணமாக கிடந்த கலாமணி, அஸ்விக்கா ஆகிய 2 பேரின் உடல்களையும் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
போலீசார் அப்போது நடத்திய விசாணையில். கலாமணி தனது மார்போடு சேர்த்து மகள் அஸ்விக்காவை துணியால் இறுக்கமாக கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தாய்- மகளின் உடல்களை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையுடன் பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கலாமணிக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணையும் நடந்து வருகிறார்கள்.
இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் இருக்கிறது. தயவு செய்து மனஅழுத்தம், கோபம், வருத்தம், ஏமாற்றம், இயலாமை என எந்த நிலை வந்தாலும், மறந்தம் தற்கொலை முயற்சியில் இறங்காதீர்கள். கிணற்றில் குழந்தையை கட்டிக்கொண்டு குதிக்கும் இதுபோன்ற முட்டாள்தனங்களை ஒருபோதும் செய்யவே கூடாது.. ஒருவேளை உங்கள் மனநிலையில் அந்த நேரத்தில் தற்கொலை எண்ணம் வந்தால், தயவு செய்து அரசின் 104 என்ற எண்ணிற்கு அழையுங்கள். தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. மாறாக உங்கள் குடும்பத்தினருக்கு ஆறாத ரணத்தை ஏற்படுத்தும்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications