Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் கண்ணாடி விரியன் பாம்பு.. வேடிக்கை பார்த்த போது வேண்டாத வேலை.. இப்படியாக ஆகணும்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை சின்னவேடம்பட்டி அருகே உள்ள அஞ்சுகம் நகரை சேர்ந்த கார்த்திக் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று புகுந்தது. அது அசைவில்லாமல் படுத்துக் கொண்டிருந்தது. இதை வேடிக்கை பார்க்க போன கார்த்திக், பாம்பு இறந்து விட்டதாக நினைத்து கவரி போட்டு தூக்கி சென்றுள்ளார். ஆனால் அந்த பாம்பு எதிர்பாராதவிதமாக கார்த்திக்கின் கையை கடித்துவிட்டது. இறுதியாக அந்த பாம்பு கடி அவருக்கு எமனாக மாறியள்ளது.

கண்ணாடிவிரியன் பாம்பு, நாகப்பாம்பு, கட்டு விரியன் பாம்பு போன்றவை கடுமையான விஷத்தன்மை கொண்டவை ஆகும். இவை கடித்தால் உடனே சிகிச்சை பெற வேண்டும். சில நேரங்களில் சிகிச்சை பெற்றாலும், அதிக விஷம் காரணமாக உயிருக்கே எமனாக மாறிவிடுகின்றன.

What happened to Karthik when he saw a glass viper at his neighbor s house in Coimbatore

கார்த்திக் வீடு

கோவை சின்னவேடம்பட்டி அருகே உள்ள அஞ்சுகம் நகரை சேர்ந்த 38 வயதாகும் கார்த்திக் என்பவர் கூலி வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி நித்யாவுக்கு 38 வயதுஆகிறது.. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நித்யா தனியாக வசித்து வருகிறார்.

கட்டையால் அடித்தனர்

இந்த நிலையில் கார்த்திக் வீட்டின் அருகே ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த ஆகஸ்ட் 26-ந் தேதி பாம்பு ஒன்று புகுந்தது. உடனே அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அங்கு புகுந்த 3 அடி நீளம் கொண்ட அந்த பாம்பை கட்டையால் அடித்துள்ளனர். இதில் அந்த பாம்பு நகர முடியாமல் ஒரு இடத்தில் சென்று படுத்துக்கிடந்தது.

பக்கத்து வீட்டில் பாம்பு

இந்த நிலையில் பக்கத்து வீட்டில் பாம்பு புகுந்ததை அறிந்த கார்த்திக், அந்த வீட்டுக்குள் சென்றார். பின்னர் அவர் அந்த பாம்பின் அருகே சென்று அதை பார்த்தார். அப்போது அங்கு இருந்தவர்கள் அது கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு என்றும் அருகில் செல்ல வேண்டாம் என்று கூறி உள்ளனர். இருந்தபோதிலும் கார்த்திக் அருகே சென்று அதை பார்த்துவிட்டு, பாம்பு இறந்துவிட்டது என்று கூறியிருக்கிறார்.

பாம்பு சாகவில்லை கடித்துவிட்டது

பின்னர் அவர், செத்த பாம்புதானே என்று...அந்த பாம்பை வெளியே கொண்டு போடுவதற்காக தனது கையால் பிடித்து தூக்கினார். பின்னர் அதை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு அங்குள்ள குப்பை மேடு பகுதிக்கு கொண்டு சென்றிருக்கிறார். அங்கு சென்றதும், மீண்டும் பிளாஸ்டிக் கவரில் இருந்த பாம்பை தனது கையால் பிடித்து வெளியே எடுத்தார். அப்போது திடீரென்று அந்த பாம்பு கார்த்திக்கின் கையில் கடித்து வைத்தது. அப்போதுதான் அவருக்கு அந்த பாம்பு சாகவில்லை...உயிரோடு இருப்பது தெரியவந்தது.

எமனாக மாறியது

பாம்பு கடித்ததால் வலியில் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். கார்த்திக்கை கடித்தது கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு என்பதால் அவருக்கு அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பக்கத்து வீட்டுக்குள் பாம்பு புகுந்ததால் வேடிக்கை பார்க்க சென்றபோது, பாம்பு உயிரிழந்துவிட்டதாக நினைத்து அதை பிடித்து தூக்கியபோது, அந்த பாம்பு கடித்து உயிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+