Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொள்ளாச்சி அமுதா தம்பியுடன் சென்ற போது.. ஒரு நொடி சிதறல்.. வாழ்க்கையில் யாருமே எதிர்பார்க்காதது

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பில் சின்னாம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்த அமுதாவிற்கு 22 வயது ஆகிறது. இவர் சமத்தூர் மணல்மேடு அருகே தனது தம்பியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அமுதா அணிந்த சுடிதாரின் துப்பட்டாவால் நடக்கக்கூடாத சம்பவம் நடந்துள்ளது. ஒரு சிறு அஜாக்கிரதையால் வாழ்க்கையில் யாருமே எதிர்பார்க்காத நிகழ்வு பெண்ணுக்கு நடந்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பில் சின்னாம்பாளையம் அண்ணா நகரில் 22 வயதாகும் அமுதா என்பவர் கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அமுதா நேற்று அதிகாலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்கு முன்பாக அங்குள்ள கோவிலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தனது தம்பி காளிதாசுடன் இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி நோக்கி சென்றுள்ளார்.

What happened to the dupatta when Amudha was riding a two-wheeler in Pollachi

சமத்தூர் மணல்மேடு அருகே வந்தபோது திடீரென்று அமுதா அணிந்திருந்த சுடிதார் துப்பட்டா இருசக்கர வாகனத்தில் சக்கரத்தில் சிக்கியது. இதில் அமுதா நிலைத்தடுமாறி கீழே விழுந்துவிட்டார். துப்பட்டா கழுத்தை இறுக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். அவரது தம்பி காளிதாஸ், அமுதாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அமுதா இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி கோட்டூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அமுதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையின் பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் அமுதாவின் சாவில் சந்தேகம் இருப்பதால், அவரது உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்குமாறு டாக்டர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக மாலை வரை அமுதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பில்சின்னாம்பாளையம் பகுதியில் திடீரென பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக பிரேத பரிசோதனை செய்து அமுதாவின் உடலை ஒப்படைக்க வேண்டும் என்றார்கள். சாலை மறியல் காரணமாக ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு கோட்டூர் போலீசார் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர். இந்த சம்பவத்தால் பொள்ளாச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+