கோயம்புத்தூரில் வீட்டில் தனியாக இருந்த அதிமுக பிரமுகர் மனைவி.. கார் டிரைவரால் என்ன நடந்தது?
கோவை: கோயம்புத்தூரின் துடியலூர் அருகே தாளியூரை சேர்ந்த கவி சரவணகுமார் என்பவர் அதிமுக நிர்வாகியாவார். இவர் இவர் பன்னீர்மடை ஊராட்சி தலைவராகவும், மாவட்ட கவுன்சிலராகவும் இருந்துள்ளார். இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி பிரிந்து வாழ்கிறார்கள். இந்நிலையில் கார் டிரைவரால் அதிமுக பிரமுகரின் மனைவிக்கு என்ன நடந்த என்பதை பார்ப்போம்.
கோவை துடியலூர் அருகே தாளியூரில் 54 வயதாகும் கவி சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். அதிமுக நிர்வாகியான இவர், பன்னீர்மடை ஊராட்சி தலைவராகவும், மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்திருக்கிறார். இவருடைய மனைவி மகேஷ்வரிக்கு 45 வயது ஆகிறது. இவர்களுக்கு சஞ்சய் என்ற 21 வயது மகனும், நேத்ரா என்ற 15 வயது மகளும் உள்ளனர். இதில் சஞ்சய் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கிறார். நேத்ரா கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பும் படித்து வருகிறார்.

கவி சரவணகுமார் மற்றும் மகேஸ்வரி இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. இதனால் மகேஷ்வரி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். கவி சரவணகுமார் அவ்வப்போது வீட்டுக்கு வந்து தனது குழந்தைகளை பார்த்துவிட்டு செல்வாராம். நேற்று காலையில் கவி சரவணகுமார் தனது வீட்டுக்கு வந்து குழந்தைகளை பார்த்து விட்டு சென்றிருக்கிறாராம். இதையடுத்து சஞ்சய் கல்லூரிக்கும், நேத்ரா பள்ளிக்கும் சென்றுவிட்டனர். மகேஷ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் வடவள்ளி காவல் நிலையத்துக்கு ஒருவர் வந்தார். தாளியூரை சேர்ந்த சுரேஷ் (45) ஆவார். இவர் அ.தி.மு.க. பிரமுகரான கவி சரவணகுமாரின் வீட்டில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். கவி சரவணகுமாரின் மனைவி மகேஷ்வரியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டதாக கூறி காவல் நிலையத்தில் டிரைவர் சரண் அடைந்துள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இது குறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு வீட்டுக்குள் மகேஷ்வரி பிணமாக கிடந்தார். உடனே போலீசார் அவரின் பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். மகேஷ்வரியை கொலை செய்ததாக சரண் அடைந்த சுரேஷ், கவிசரவணகுமாரின் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். அவர் எதற்காக மகேஷ்வரியை கொலை செய்தார் என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications