கோவை மக்களுக்கு இது கெட்ட செய்தி.. "அவிநாசி சாலை!" இந்த பிரச்சினையை எதிர்பார்க்கலயே! அடுத்து என்ன
கோவை: அவிநாசி சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி விரைவாக நடந்து வரும் நிலையில், இதில் இப்போது புதிய பிரச்சினை எழுந்துள்ளது. இதனால் பணிகள் தாமதமாகவும் வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து முக்கிய நகரமாகக் கோவை இருக்கிறது. கோவை தொழில் நகராகப் பல ஆண்டுகளாக முக்கிய இடத்தில் இருப்பது அனைவருக்கும் தெரியும். இப்போது ஐடி போன்ற டெக் துறையிலும் கோவை வளர்ந்து வருகிறது.
இதன் காரணமாகவே மாநிலத்தில் சென்னைக்கு அடுத்து அதிக ஐடி நிறுவனங்களைக் கொண்ட நகரமாகக் கோவை மாறியுள்ளது. வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் கோவையைச் சுற்றியுள்ள பலரும் இப்போது கோவையை நோக்கி வருகிறார்கள்.
மேம்பாலம்: இதனால் மாநிலத்தில் மட்டுமின்றி நாட்டிலேயே வளரும் நகரங்களில் முக்கிய நகரமாகக் கோவை இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற சிறந்த ஸ்மார்ட் சிட்டி நகரங்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கூட தமிழ்நாட்டில் இருந்து கோவை மட்டுமே கலந்து கொண்டது. அந்தளவுக்குக் கோவை இப்போது முக்கிய நகரமாக மாறி வருகிறது. இதன் காரணமாகவே வந்தே பாரத் போன்ற திட்டங்களும் முதலில் கோவையில் கொண்டு வரப்படுகிறது.
இப்போது தமிழக அரசு அங்கு மெட்ரோ ரயிலையும் அமைக்க முடிவு செய்துள்ளது. இதனால் கோவை மக்கள் தொகை கணிசமாக அதிகரித்தே வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்பால் வாகன நெரிசலும் அதிகரிக்கும் என்பதால் கோவையில் டிராபிக் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் மின்சார ரயில்கள், மெட்ரோ எனப் பல பொது போக்குவரத்து வசதிகள் உள்ள நிலையில், கோவை மாநகர பேருந்துகளை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டி உள்ளது.
கோவை டிராபிக்: இதனால் கோவையில் டிராபிக் நெரிசல் அதிகரித்தே வருகிறது. அதிலும் குறிப்பாக பீக் ஹவரில் வெளியே சென்றால் சிக்னலில் மாட்டாமல் திரும்ப முடியாது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினையைச் சரி செய்யக் கோவை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாகக் கோவையில் அவிநாசி சாலையில் தான் வாகன நெரிசல் அதிகமாக இருக்கிறது.
இதற்கிடையே கோவையில் டிராபிக் நெரிசலைக் குறைக்கும் வகையில் அவிநாசி சாலையில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. 10.1 கிமீ நீளத்திற்கு அமையும் இந்த மேம்பாலம் நிச்சயம் அப்பகுதியில் டிராபிக்கை வெகுவாக குறைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த பணிகள் தொடங்கப்பட்டாலும் கூட கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் கட்டுமான பணிகள் தாமதமானது. இப்போது தான் அவை வேகமாக நடக்கத் தொடங்கியுள்ளது.

புதிய பிரச்சினை: இதனிடையே அவிநாசி சாலை மேம்பாலம் குறித்து சில முக்கிய தகவல்களை வெளியாகியுள்ளது. அதாவது இந்தப் பணிகள் இப்போது 45% நிறைவடைந்துள்ளதாம். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "ரயில் பாதைகளுக்கு மேல் மேம்பாலம் கட்ட வேண்டியுள்ளதால்.. தெற்கு ரயில்வேயின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம். மற்ற இடங்களில் பணிகள் படுவேகமாக நடக்கிறது. இங்கே 304 பகுதிகளில் 115 பகுதிகளை வைத்துவிட்டோம்.
இப்போது மற்றொரு பிரச்சினை என்னவென்றால் இந்த உயரடுக்கு மேம்பாலத்தில் வளைவு இருக்கும் 8 இடங்களில் சாலையின் அகலம் அதிகரிக்கும் என்பதால், திட்டத்தை முடிக்கக் கூடுதலாக சுமார் 1.65 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. நிலம் கையகப்படுத்த ஆவணங்களைச் சென்னைக்கு அனுப்பியுள்ளோம். இதற்கு ஒப்புதல் தந்தால் பணிகள் ஆரம்பிக்கும். இதற்குத் தனியாக 310 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். நிலத்தைத் தர முன்வருவோருக்குச் சந்தை மதிப்பைக் காட்டிலும் கூடுதலாக 25% தொகை வழங்கப்படும்" என்றார்.
கடந்த 2020 டிசம்பர் மாதம் இதற்கான கட்டுமானம் ஆரம்பித்து. இதன் கட்டுமானம் அடுத்தாண்டு ஆகஸ்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நான்கு லேன் மேம்பாலம் உப்பிலிபாளைம் போலீஸ் குடியிருப்பு அருகே தொடங்கி கேஎம்சிஎச் அருகே கோல்ட்வின்ஸில் முடிகிறது.
-
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி.. கேம் சேஞ்சர் ஸ்டாலின்.. திமுக பக்கா ஸ்கெட்ச் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications