அவங்க பிளனே வேற! திடீரென கிளம்பிய பொன்னியின் செல்வன் சர்ச்சை.. காரணமே இதுதான்! சுப வீரபாண்டியன் பரபர
கோவை: பொன்னியின் செல்வன் குறித்து சில நாட்களாகச் சர்ச்சை கிளம்பி உள்ள நிலையில், இது தொடர்பாகச் சுப வீரபாண்டியன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
கல்கி எழுத்தில் 1950களில் தொடர்கதையாக வெளியானது தான் பொன்னியின் செல்வன். சோழர்கள் குறித்த இந்த வரலாற்றுப் புனைவு 5 பாகங்களாகப் புத்தகமாகவும் வெளியானது.
இந்த வரலாற்று நாவலைப் பலரும் திரைப்படமாக எடுக்க முயன்றனர். இருப்பினும், பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் யாராலும் இதை வெற்றிகரமாகப் படமாக எடுக்க முடியவில்லை.

பொன்னியின் செல்வன்
இந்தச் சூழலில் இப்போது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. இதில் முதல் பாகம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்ற பெற்றது. விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்து உள்ளது. திரையரங்குகளில் இந்தப் படம் வசூலைக் குவித்து வரும் நிலையில், சமூகத்திலும் இது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெற்றிமாறன்
இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் இயக்குநர் வெற்றிமாறன். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசி அவர், "சினிமா என்பது வெகுமக்களை மிக எளிமையாகச் சென்றடையும் கலைவடிவம். அதைச் சரியாகக் கையாளவில்லை வேண்டும் இல்லையென்றால் நமது அடையாளங்கள் பறிக்கப்படும். வள்ளுவருக்குக் காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படித் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது" என்று அவர் பேசி இருந்தார்.

பதிலடி
இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் குரல் கொடுக்க தொடங்கினர். பல்வேறு வலதுசாரிகளும் வெற்றிமாறன் கருத்துக்கு கடும் எதிர்வினையாற்றினர். தஞ்சை பெரிய கோயில் தொடங்கி பல்வேறு சிவன் கோயில்களைக் கட்டிய ராஜராஜன் சோழன் இந்து மன்னர் இல்லை என்று எப்படிக் கூற முடியும் என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இது பெரிய விவாதமாகவே மாறிவிட்டது.

சுப வீரபாண்டியன்
இந்தச் சூழலில் இது தொடர்பாகத் திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப வீரபாண்டியன் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். பொள்ளாச்சி முன்னாள் நகர மன்ற தலைவர் மிசா விஜயராகவன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைந்த நிலையில், அவரது திருவுருவப் படத்திற்குப் புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பொள்ளாச்சி நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சுப வீரபாண்டியன் உள்ளிட்ட பலரும் விஜயராகவன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

பிளன வேற
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப வீரபாண்டியன், "ஆ ராசா, இயக்குநர் வெற்றிமாறன் பேசியதை வைத்துக் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றர். திட்டமிட்டுத் திணிப்பு வாதத்தை ஏற்படுத்துகின்றனர்.. இந்த விவகாரத்தில் நடிகர் கமலஹாசன் பேச்சைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.. நாட்டு மக்களின் பிரச்சினை ராஜராஜ சோழன்
இந்துவா? இல்லையா? என்பது அல்ல..

திசைதிருப்பும் முயற்சி
இதை வைத்துக்கொண்டு மக்களின் உண்மையான பிரச்சனைகளைத் திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.. உத்திரப் பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால் மதுரையில் சுற்றுச்சுவர் பணிகள் கூட முடியாத நிலையில், 95 சதவீத பணிகள் முடிந்து விட்டது என்று பொய் பேசுகிறார்கள். நாட்டில் பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் பிரச்சினையைத் திசைதிருப்பவே இந்த முயற்சிகளை மேற்கொள்கின்றனர்" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications