பஸ் டிரைவர் ஷர்மிளா திடீர் பணிநீக்கம்.. கனிமொழி வந்த போது என்ன நடந்தது? நடத்துநர் பரபர விளக்கம்
கோவை: கோவையின் முதல் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இன்று காலை என்ன நடந்தது என்பதைப் பேருந்து நடத்துநர் பயிற்சியில் ஈடுபட்ட பெண் விளக்கியுள்ளார்.
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஷர்மிளா, அங்கே தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்தை ஓட்டி வருகிறார். கோவையில் முதல் பெண் பஸ் ஓட்டுநராக அறியப்படும் இவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

24 வயது நிரம்பிய ஷர்மிளா கடந்த 3 வாரங்களாக அவர் பஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் தான் பாஜக கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன், ஷர்மிளாவை சந்தித்துப் பாராட்டி இருந்தார்.
இதற்கிடையே இன்று காலை இன்று காலை திமுக எம்பி கனிமொழி காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணித்தார். அப்போது ஷர்மிளாவை கட்டியணைத்து வாழ்த்திய கனிமொழி, அவருக்கு வாட்ச் ஒன்றையும் பரிசாகக் கொடுத்தார். இதற்கிடையே ஷர்மிளா பஸ் டிரைவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. தனியார் பேருந்து உரிமையாளர் ஷர்மிளாவை டிஸ்மிஸ் செய்ததாகத் தகவல் பரவின.
இருப்பினும், அதை மறுத்த தனியார் பேருந்து உரிமையாளர் ஷர்மிளாவே தான் பணியில் இருந்து விலகுவதாகக் கூறியதாக விளக்கமளித்தார். கனிமொழி வந்த போது அங்கே பயிற்சி நடத்துநராக இருந்த பெண் முறையாக நடந்து கொள்ளவில்லை என்றும் இதுவே பிரச்சினைக்குக் காரணம் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அந்த பயிற்சி நடத்துநர் விளக்கமளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கனிமொழி ஏறியதும்.. டிக்கெட் எடுக்க வேண்டும். அதற்காகக் காசு கொடுங்கள் என்று கேட்டேன்.. அதற்கு ஷர்மிளா, நீங்கள் ஒன்னும் எடுக்க வேண்டாம்.. நானோ அப்பாவோ காசு கொடுப்பார் என்றார். அவர்களுக்கு (ஷர்மிளா) ஏன் வீண் செலவு என்று நினைத்தே நான் கனிமொழியிடம் காசு கேட்டேன். எனது கடமையை முறையாகச் செய்ய வேண்டும் என்றே கேட்டேன்.
கனிமொழி சிரித்துக் கொண்டே தான் டிக்கெட் பணத்தை எனது உதவியாளர் கொடுப்பார் என்றார். அதற்குள் டிக்கெட் வேண்டாம் எனச் சொல்லவே.. நான் அங்கிருந்து நகர்ந்தேன். அதற்குள் இரண்டு பேர் வந்து டிக்கெட்டிற்கான பணம் 12 ரூபாயைக் கொடுத்தார்கள். மொத்தம் 6 டிக்கெட் எனச் சொன்னார்கள். டிக்கெட்டையும் சில்லறையையும் வாங்கி கொடுத்துவிட்டேன். கனிமொழியிடம் நானே சென்றே பேசினேன்.. முதல்வர் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால்... முதல்வர் குறித்து கனிமொழியிடம் கேட்டேன்.
வலுவான குடும்ப பின்னணி இருப்போர் மட்டும் தான் அரசியல் வருவார்களா என் கேட்டேன். அப்படியில்லை அனைவரும் அரசியலுக்கு வரலாம் என்று கனிமொழி நன்றாகவே பேசினார். நான் இங்கே வேலைக்குச் சேர்ந்தே 4 நாட்களே ஆகிறது. எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. கனிமொழி இறங்கியவுடன் இவரும் இறங்கிவிட்டார். அதன் பிறகு வேறு ஒரு டிரைவர் தான் வண்டியை ஓட்டினார்.
சற்று நேரம் கழித்து மீண்டும் பஸில் ஏறிய ஷர்மிளா திடீரென "எனக்கு வேலை செய்யப் பிடிக்கவில்லை" என்று கூறி சத்தம் போட ஆரம்பித்தார். அதன் பிறகு நானே அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். ஒரு முறை இல்லை பல ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டேன். அவரிடம் விளக்க முயன்றேன். இருப்பினும், அவர் என்னுடன் பேசவே மறுத்துவிட்டார். நீங்கள் இப்போது வேலையை விட்டுச் சென்றால், பிறகு எனக்கு யாரும் வேலை தர மாட்டார்கள் என்றெல்லாம் சொன்னேன்.
இருப்பினும், அவர் எதையும் கேட்கவில்லை. மன்னிப்பு கேட்டாலும் திரும்பத் திரும்ப வேலை செய்யப் பிடிக்கவில்லை என்றே அவர் கூறி வந்தார். பின் ஆபிசில் சென்று பேசிக் கொள்வதாகத் தெரிவித்தார். இது எல்லாம் பேருந்திலேயே தான் நடந்தது. கனிமொழியிடம் டிக்கெட் வாங்கியதற்காகவே என்னிடம் அவர் சண்டை போட்டார். எனது கெஸ்டாக வந்தவரிடம் எப்படி டிக்கெட் கேட்கலாம் எனச் சொல்லி வாக்குவாதம் செய்தார். வேலை செய்யப் பிடிக்கவில்லை என்றே திரும்பத் திரும்ப சொன்னார்" என்று அவர் தெரிவித்தார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை












Click it and Unblock the Notifications