Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்க போன மங்கையர்க்கரசி.. இப்படி எல்லாமா சிக்கல் வருது? பாருங்க

Subscribe to Oneindia Tamil

கோவை: அடுக்குமாடி குடியிருப்பு வாங்கும் போது நடைமுறையில் பல்வேறு விஷயங்களை அடுக்குமாடி விற்பனை நிறுவனம் பின்பற்றுகிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை மட்டும் நம்பிவிடக்கூடாது. ஒப்பந்தங்களில் உள்ளவை தான் நிஜம் என்பதால் அதில் கவனமாக இருக்க வேண்டும். கோவையில் அடுக்குமாடி குடியிருப்பில் பிளாட் வாங்க ஆசைப்பட்டவர், அங்கு ஏற்பட்ட சிக்கலால் கடைசியில் நீதிமன்றம் வரை படியேறியுள்ளார். கடைசியில் கொடுத்த அட்வான்ஸை திரும்ப தர கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரிய நகரங்களில் இடமதிப்பு கோடிக்கணக்கில் மாறிவிட்டது. நகரத்திற்கு வீடு வேண்டும் என்றால் பிளாட் மட்டுமே வாங்க முடியும் என்கிற அளவிற்கு அதன் மதிப்பு உயர்ந்துவிட்டது. அதேபோல் அடுக்குமாடி குடியிருப்புகளை பொறுத்தவரை கேட்டெட் கம்யூனிட்டியாக இருப்பது, பல்வேறு வசதிகள் இருப்பது சிறப்பு அம்சமாக இருப்பதால், பலரும் அடுக்குமாடி வாங்குகிறார்கள். குறிப்பாக வீடு வாங்க நினைக்கும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு, அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் தான் சென்னை, கோவையில் வரப்பிரசாதமாக இருக்கிறது.

Coimbatore apartment home

அடுக்குமாடி வீடுகளை பொறுத்தவரை நிலம் தொடர்பான எல்லை வரையறை இன்றி, அதில் வீடு வாங்கும் அனைவருக்காகவும் பங்கிடப்படும்.
இது நிலத்தின், பிரிபடாத பங்கு யு.டி.எஸ்., என்று குறிப்பிடப்பட்டு, வீடு வாங்குவோர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்படும். யு.டி.எஸ்., பாகத்தின் அளவின் அடிப்படையில், கூட்டு பட்டா வழங்கப்படும். எனவே அடுக்குமாடி திட்டங்களில், வீடு வாங்கும் போது வீட்டின் அளவு மட்டுமின்றி, அதில் உங்களுக்கான யு.டி.எஸ்.,பாக அளவு என்ன, என்பது தொடர்பாக விவரங்களை தெளிவாக விசாரிப்பது நல்லது. அடுக்குமாடி வீடு வாங்கும் முன்பு ரெரா அனுமதி உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல் அடுக்குமாடி திட்டத்தில் மொத்தம் உள்ள வீடுகள் எண்ணிக்கை என்ன, யு.டி.எஸ்., பங்குகள் எண்ணிக்கை என்ன என்பதை கவனிக்க வேண்டும். வீடுகளின் எண்ணிக்கையை காட்டிலும், கூடுதலாக யாருக்காவது யு.டி.எஸ்., பங்கு இருந்தால், அதில் ஏதோ குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் அனைத்து ஆவணங்களையும் சரியாக உள்ளது என்று தெரிந்தால் மட்டுமே பிளாட் வாங்கலாம். எனினும் பிளாட் வாங்க போகும் போது இப்படியும் சிக்கல் வராலாம். கோவையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

கோவை கிணத்துக்கடவு, காமராஜ் காலனியை சேர்ந்த மங்கையர்க்கரசி என்பவர் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறுகையில், "கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு நிறுவனம் கட்டி வந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க விண்ணப்பித்திருந்தேன். அதன் பின்னர் கடந்த 2022-ம் ஆண்டு ரூ.5 லட்சம் ஆன்லைனில் அட்வான்ஸ் தொகையாக அந்த நிறுவனத்திற்கு செலுத்தினேன். பிளாட்டை பொறுத்தவரை விற்பனை பத்திரத்தை நிறைவேற்றிய பின்னரே மற்ற தொகை வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் கிளப் ஹவுசிற்கான தொகையை முன்கூட்டியே செலுத்துமாறு என்னிடம் கூறினார்கள்.

இதனால் நான் பிளாட்டை வாங்க விருப்பம் இல்லாமல், அட்வான்ஸ் தொகையை திரும்ப தருமாறு அவர்களிடம் கேட்டேன். அந்த நிறுவனத்திற்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்தேன். ஆனால் புக்கிங்கிற்காக நான் கொடுத்த பணத்தை திரும்ப தரவில்லை. பல முறை கேட்டும் திரும்ப தரவில்லை. இது ரியல் எஸ்டேட் விதிமுறை மீறல் ஆகும்.ஆகவே உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரணை நடத்திய கோவை நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தங்கவேலு, உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர். அதில், சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் ரூ.5 லட்சத்தை திரும்ப வழங்க வேண்டும். மனஉளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம், கோர்ட் செலவாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+