கோவை மக்களுக்கு மெகா இன்ப செய்தி.. அவிநாசி சாலை மேம்பாலம்.. கட்டுமானம் எப்போது முடியும்! செம தகவல்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையின் மிக முக்கிய சாலையான அவினாசி சாலையில் இப்போது மேம்பால கட்டுமானம் நடந்து வரும் நிலையில், இதன் பிரதான கட்டுமானம் எப்போது நிறைவடையும் என்பது தொடர்பாக அதிகாரிகள் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளனர். கட்டுமானம் படுவேகமாக நடந்து வருவதாகவும் எவ்வளவு சீக்கிரம் முடியுமா அவ்வளவு சீக்கிரம் கட்டுமானத்தை முடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் உள்ள மிக முக்கிய சாலை என்றால் அது அவினாசி சாலை தான்.. கோவை பகுதியைச் சேர்ந்த மக்கள் வெளியூர் செல்ல இந்த சாலையே பிரதானம்.. கோவையில் பல முக்கிய நிறுவனங்களும் இந்த சாலையில் தான் செயல்பட்டு வருகிறது.

Coimbatore traffic tamil nadu

கோவை மேம்பாலம்: இதன் காணமாகக் கோவை அவினாசி சாலை எப்போதுமே போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாகவே இருக்கும். லட்சுமி மில்ஸ், நவ இந்தியா, ஹோப் காலேஜ், பீளமேடு என்று இந்த சாலை செல்லும் அனைத்துமே முக்கிய பகுதிகள் என்பதால் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பகுதிகளைத் தாண்டவே நீண்ட நேரம் ஆகும். இந்த போக்குவரத்தை நெரிசலைக் குறைக்க அங்கே மேம்பாலம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. அதன்படி சுமார் 10.1 கிலோமீட்டர் தொலைவிற்கு அவினாசி மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கோவையில் உள்ள அவிநாசி ரோடு மேம்பாலத்தின் பிரதான ரயில் பாதையை இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க முடியும் என்று மாநில நெடுஞ்சாலைத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.. இதில் சாய்வு தளம் உள்ளிட்ட பணிகள் அனைத்தும், வரும் மார்ச் மாத இறுதிக்குள் நிறைவடையும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எப்போது முடியும்: உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்ட்வின்ஸ் வரை சுமார் 10 கி.மீ தூரத்திற்கு மேம்பாலத்தின் பிரதான பாதையை இந்த ஆண்டு செப்டம்பர் இறுதிக்குள் முடிக்கப்படும் என்று முன்னதாக அதிகாரிகள் கூறியிருந்தனர். இருப்பினும், கட்டுமானத்தில் சில தாமதம் ஏற்பட்ட நிலையில், இப்போது பிரதான கட்டுமானம் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்: சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இந்த மேம்பாலப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.. ஹோப் கல்லூரி அருகே இரண்டு தூண்கள் அமைக்கும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "ஹோப் காலேஜ் அருகே ரயில்வே கிராசிங்கின் குறுக்கே டெக்கை அமைக்க மாநில அரசும் ரயில்வேயும் அடுத்த வாரம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும். புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான உடன் இந்த குறிப்பிட்ட பகுதியில் கட்டுமானத்தைத் துரிதப்படுத்துவோம். அந்த பகுதிக்கான கட்டுமானம் விரைவில் முடிவடையும்" என்று தெரிவித்தார்.

போக்குவரத்து மாற்றங்கள்: இந்த கட்டுமானம் காரணமாகக் கடந்த மாதமே போக்குவரத்தை மாற்றத்தைக் கோவை போலீசார் அறிவித்திருந்தனர். இருப்பினும், இங்கே பணிகள் வேகமெடுத்த பிறகே போக்குவரத்து மாற்றம் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டுமானம் ஒரு பக்கம் நடக்கும் அதேநேரம் வளைவுப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளும் மறுபுறம் நடந்து வருவதால்.. அப்பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பதிலும் தாமதம் நிலவுகிறது.. இருப்பினும், கட்டுமானம் தீவிரமாக நடந்து வருவதாகவும் முழு திட்டமும் மார்ச் 2025 இறுதிக்குள் முடிக்கப்படும் என்றும் அதிகாரி கூறினார்.

கோவையில் மிக முக்கிய ரூட்டாக அவிநாசி சாலை இருக்கும் நிலையில், இங்கே ஹோப் காலேஜ் அருகே நடக்கும் இந்த கட்டுமான பணிகளால் அங்குக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+