கோவை மக்களுக்கு நிம்மதி! "அவினாசி சாலை மேம்பாலம் அக்டோபர் 9ம் தேதி திறக்கப்படும்!" எ.வ.வேலு அறிவிப்பு
கோவை: கோவையில் டிராபிக் பிரச்சனையைக் கருத்தில் கொண்டு அவினாசி சாலையில் உயர்த்தப்பட்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் இப்போது இறுதிக் கட்டத்தில் இருக்கும் சூழலில் பாலம் எப்போது கட்டி முடிக்கப்படும் என்பது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். அடுத்த மாதம் இந்த பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் ஒன்றான கோவை படுவேகமாக வளர்ந்து வருகிறது. தொழில்துறை, ஐடி என எல்லா துறைகளிலும் கோவை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கோவைக்கு வருகிறார்கள். ஆனால், அந்த அதீத மக்கள் தொகையைக் கையாளும் திறன் கோவைக்கு இல்லை.

டிராபிக் சிக்கல்
இதனால் டிராபிக் என்பது கோவையில் மிகப் பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. குறிப்பாகக் காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியே சென்றாலே நிச்சயம் டிராபிக்கில் சிக்கிக் கொள்வோம் என்ற சூழலே இருக்கிறது. இதற்கிடையே டிராபிக் அதிகம் இருக்கும் பகுதியான கோவை அவினாசி சாலையில் உயர்த்தப்பட்ட சாலை அமைக்கத் தமிழக அரசு முடிவு செய்தது.
எப்போது திறக்கப்படும்
கோவை உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்ட்வின்ஸில் வரை சுமார் 10 கிமீ நீளத்திற்கு உயர்த்தப்பட்ட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. கொரோனா காரணமாக முதலில் கட்டுமானம் தாமதம் அடைந்த போதிலும், இப்போது நிறைவடையும் சூழலை எட்டியுள்ளது. கடந்தாண்டே இந்த பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் பணிகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே கோவை அவிநாசி மேம்பாலம் வரும் அக்டோபர் 9ம் தேதி திறக்கப்படும் என்றும் இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
அவிநாசி உயர்மட்ட சாலை பணிகளையும் காந்திபுரத்தில் கட்டப்பட்டு வரும் பெரியார் நூலகம் அறிவுசார் மைய பணிகளையும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிய அவர், பொங்கலுக்கு முன்பு பெரியார் நூலகம் திறக்கப்படும் எனத் தெரிவித்தார். முதல்வரின் பயணி திட்டங்களுக்கு ஏற்ப திறப்பு விழா முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
தாமதம் ஏன்
தொடர்ந்து அவினாசி உயர்மட்ட சாலைப் பணிகள் குறித்துப் பேசிய அவர், "அவினாசி உயர்மட்ட மேம்பால கட்டுமானம் 4 ஆண்டுகளில் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒன்பது மாதங்கள் தாமதம் ஆகிவிட்டது. சிப்டிங் பணிகள், மின்சார இணைப்புகள், நில எடுப்பு பணிகள் உள்ளிட்ட பணிகளில் ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணம்.. அதேபோல ரயில்வே துறையிலும் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதுவும் கூட பால கட்டுமானம் உரிய நேரத்தில் முடியாமல் போக காரணமாக இருக்கிறது.
1791 கோடி ரூபாய் மதிப்பில் இந்த உயர்மட்ட சாலை கட்டப்பட்டுள்ளது. விமான நிலையம், ஹோப் காலேஜ், நவ இந்தியா மற்றும் அண்ணா சிலை ஆகிய நான்கு இடங்களில் ஏறு மற்றும் இறங்கு பாலம் அமைக்கப்படும்.. இதன் மூலம் போக்குவரத்து சீராக இருப்பது உறுதி செய்யப்படும். கோவைக்கு அடுத்த மாதம் முதலமைச்சர் வருகிறார். அதை கருத்தில் கொண்டு திறப்பு விழா முடிவு செய்யப்பட்டது. பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டது. ஓரிரு பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. அதுவும் கூட இந்த மாத இறுதிக்குள் பணிகளை முடித்துவிடும்" என்றார்.
தனியார் ஹோட்டல் விவகாரம்
அவினாசி மேம்பாலத்தில் தனியார் ஹோட்டல் அருகே தூண் அமைப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.. அது குறித்த கேள்விக்கு அவர், "தனியார் ஹோட்டலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. நீதிமன்றத்தில் வழக்கை நாங்கள் சந்தித்து வருகிறோம்.. அது குறித்து நாங்கள் நீதிமன்றத்தில் விளக்கம் தந்துள்ளோம். ஆனால், பாலம் திறப்பு அதனால் தடைப்படாது. அந்த வழக்கு முடியும் போது அங்கு இறங்கு பாலத்தை அமைப்போம்" என்றார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications