லுலு மால் அசத்தல்.. கோயம்புத்தூரில் செம ஆஃபர்.. இதுலேயும் தள்ளுபடியா? மலைக்க வைத்த கோவை லுலு ஹைப்பர்
கோவை: தமிழ்நாட்டின் முதல் "லுலு ஹைப்பர்" மார்க்கெட் என்ற பெயரை பெற்ற நிலையில், சிறப்பு தள்ளுபடி ஒன்றை அறிவித்து, பொதுமக்களை ஈர்த்திருக்கிறது கோவையின் லுலு மால். என்ன அது?
கோவை அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி மில்ஸ் வளாகத்தில், லுலு ஹைப்பர் மார்க்கெட் 1.20 லட்சம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக திறக்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

கோவையை பொறுத்தவரை, மிகப்பெரிய தொழில் நகரம் என்பதால், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், மால்கள் என ஷாப்பிங் இடங்கள் உள்ளன.. எனினும், எல்லா பொருட்களையும் ஒரே இடத்தில் கிடைக்கக்கூடியதாக இந்த ஹைப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. முக்கியமாக வீட்டு உபயோக பொருட்கள், உணவுகள், காய்கறிகள், என்று அனைத்துமே இதற்குள் அடங்கிவிட்டன..
பிரபலம்: லுலு மால் ஆரம்பித்த நாளிலிருந்து இப்போதுவரை அதன் விற்பனையில் எந்தமான சுணக்கமும் இல்லை.. இந்த லுலு வந்ததினால், நகரத்திலுள்ள மற்ற ஷாப்பிங் மார்க்கெட்டுகள், மால்களில் கூட்டம் குறைந்து காணப்படுவதாக சொல்கிறார்கள்.. அதுவும் பண்டிகை காலம் வந்துவிட்டால், ஹைப்பர் மாலுக்குள் எந்நேரமும் கூட்ட நெரிசல் இருந்துகொண்டேயிருக்கிறதாம்.
அதுமட்டுமல்ல, லுலு மால்களில் அறிவிக்கப்படும் ஸ்பெஷல் ஆஃபர்களுக்கு கோவை மக்களிடம் தனி மவுசு உள்ளது.. இப்படித்தான் கடந்த தீபாவளி பண்டிகைக்கு, ஆஃபர்கள் போடப்பட்டன.. அப்போது, 60 சதவீதம் வரை தள்ளுபடியில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது..
தம்பதிகள்: அதேபோல, ஜெக்ஸ் என்ற புதிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அறிமுக விழா புதிதாக திருமணமான 50 தம்பதிகளுக்கு, ரூ.1999 க்கு மேல் பொருட்கள் வாங்கினால் அரை கிராம் தங்க காசு பரிசாக வழங்குவதாக அறிவித்திருந்ததால், கோவையே திக்குமுக்காடிவிட்டது. "பியூட்டி பெஸ்ட்" என்ற அழகு சாதனப்பொருட்களுக்கு 50 சதவீத தள்ளுபடி விலையில் பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டது.. இந்த தள்ளுபடி அறிவிப்பை கேள்விப்பட்டதுமே பெண்கள் கூட்டம் லுலுவில் நிறைந்து வழிந்தது.
அதுமட்டுமல்ல, அதிகளவிலான பொருட்களை தொடர்ந்து வாங்கியவருக்கு கார் ஒன்றை பரிசாக தந்து, மொத்த பேரையும் அப்போது திகைக்க வைத்துவிட்டது லுலு நிறுவனம். இந்த பரிசு பொருட்களை வாங்குவதற்காகவே, மக்கள் லுலுவில் குவிந்து வருகிறார்களாம்..
ரம்ஜான்: இப்போதுகூட, ரம்ஜானையொட்டி, 1 முதல் 10ம் தேதி ஒரு ஸ்பெஷல் ஆபர் அறிவிக்கப்பட்டிருந்தது.. அதேபோல, பொம்மைக்களுக்கு திருவிழா என்ற பெயரில் அனைத்து பொம்மை மற்றும் விளையாட்டு பொருட்களுக்கும் 50 சதவீத தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆபரானது வரும் 30-ந் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொம்மையுடன் சைக்கிள் போன்ற பொருட்களுக்கும் 50 சதவீத தள்ளுபடி தரப்படுகிறது.. அதிலும் குறைந்தபட்சம் 20 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது.
அரிசி வகைகள்: அதேபோல, அரிசி வகைகளுக்கும் "ரைஸ் காலா" என்ற பெயரில் இந்த ஆஃபர் உள்ளது.. இந்த ஆஃபர் வருகிற 15ம் தேதி வரை உள்ளது.. அரிசியைகூட தள்ளுபடி விலையில் தருவதால், கோவையிலிருக்கும் மற்ற அரிசி வியாபாரிகள் கதிகலங்கி போயிருக்கிறார்களாம்..
ஏற்கனவே, சென்னையில் லுலு திறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகிவரும்நிலையில், வியாபாரிகள் வியாபாரிகள் சங்கங்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.. இப்போது அரிசியையும் ஆஃபர் விலையில் தந்துவருவது, வியாபாரிகளை மேலும் கொதிப்புக்கு உள்ளாக்கி வருகிறதாம்.
மேட்டுப்பாளையம்: அதுமட்டுமல்ல, தஞ்சாவூரில் அரிசி அரைக்கும் ஆலையும் விரைவில் அமைக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், கோவையிலேயே மேலும் ஒரு லுலு நிறுவனத்தின் கிளை திறக்கப்படும் என்ற அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.. இதனை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உணவு பதப்படுத்தும் தளங்களை கொண்டு வர லுலு நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது..
அவ்வாறு மேட்டுப்பாளையத்தில் அமையும் பட்சத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அமையும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.. வேலைவாய்ப்புகளை லுலு நிறுவனங்கள் ஏற்படுத்தினாலும்கூட, அரிசி உள்ளிட்ட மற்ற வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக அதிருப்தி வெடித்து வருகிறது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications