கோவையின் இதய பகுதியில் கலக்கல் மாற்றம்.. மொத்தமாக மாறுதே.. இது நிஜமாகவே வேற லெவல்! மெகா இன்ப செய்தி
கோவை: தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கோவையில் போக்குவரத்து உட்கட்டமைப்பில் மிக முக்கிய மாற்றம் வர இருக்கிறது. இது வந்துவிட்டால் நகரின் போக்குவரத்து பிரச்சினை பெரியளவில் சரியாகும்.
தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் ஒன்று கோவை. சென்னைக்கு அடுத்தபடியாக மாநிலத்தின் முக்கிய நகராகக் கோவை இருக்கிறது. ஐடி, தொழில்துறை என பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்ற ஒரு நகராகக் கோவை இருக்கிறது.

இதன் காரணமாகவே பல முக்கிய திட்டங்களிலும் கோவைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் முழுமையாக இயக்கப்பட்ட முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சென்னை- கோவைக்கு இடையே இயக்கப்பட்டது ஒரு சின்ன உதாரணம்.
கோவை டிராபிக்: இப்படி முக்கிய நகரமாக இருந்தாலும் கூட கோவையில் போக்குவரத்து உட்கட்டமைப்பு வலுவாக இல்லை. பொது போக்குவரத்து எனப் பார்த்தால் புறநகர் ரயில் அல்லது மெட்ரோ என இரண்டும் இல்லை. பேருந்துகள் மட்டுமே ஒரு ஆப்ஷனாக இருக்கிறது. இதனால் பீக் ஹவர்களில் கோவையில் எப்போதும் டிராபிக் உச்சத்திலேயே இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு அங்கே டிராபிக்கை குறைக்கக் கோவை மாநகராட்சியுடன் இணைந்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கோவையின் முக்கிய பகுதியான உக்கடத்தில் இப்போது மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இது 280 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பால கட்டுமான பணிகளை வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க மாநில நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கான கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இருப்பினும், இத்திட்டத்திற்கு இன்னும் 2.7 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவில்லை என்பதால் திட்டமிட்டபடி பணியை முடிக்க முடியுமா என்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
என்ன சிக்கல்: இத்திட்டத்திற்கு மொத்தம் 16 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அதில் சுமார் 13.3 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுவிட்டது. இன்னும் 2.7 ஏக்கர் மட்டுமே தேவைப்படும் நிலையில், அதையும் விரைவாகக் கையகப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முழுத் திட்டத்தையும் கையகப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட மொத்த 16 ஏக்கரில் இன்னும் 2.7 ஏக்கர் மட்டுமே கையகப்படுத்தப்படாமல் உள்ளது. அதையும் முடிக்க முயற்சிகள் நடந்து வருவதாக, துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த பாலம் ஒப்பணக்கார தெருவில் இருந்து ஆத்துப்பாலம் வரை 3.8 கி.மீ. நீளத்தில் அமைகிறது. இதில் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலைகளில் கனெக்ஷன்களையும் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எப்போது முடியும்: கோவை நகரின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் முக்கிய திட்டமாக அறியப்படும் இத்திட்டம் ₹280 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலத்தின் முதல் கட்ட பணிகள் 2018ஆம் ஆண்டில் தொடங்கிய நிலையில், இந்தாண்டில் தான் அது நிறைவடைந்தன. ஆத்துப்பாலத்தில் இருந்து இரண்டாம் கட்ட பணிகள் 2021 ஜனவரியில் தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டு ஜூலையில் கட்டுமான பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டது. இருப்பினும், நிலம் கையகப்படுத்தும் பணி இன்னும் முடிவடையாததால் அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், நவம்பர் இறுதிக்குள் பாலத்தின் பிரதான கட்டுமான பணியை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை முழுமையாக முடித்து வாகன போக்குவரத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications