"விட்ருங்க, கர்ப்பமா இருக்கேன்".. பதறிய தமன்னா.. சுற்றி வளைத்த போலீஸ்.. கோர்ட் சொன்ன முக்கிய உத்தரவு
கோயம்புத்தூர்: ஆயுதங்களை ஏந்தி, ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட இளம்பெண் தமன்னா என்கிற வினோதினிக்கு, இன்று கோவை கோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி கோகுல்.. இவர் கோவை நீதிமன்றம் அருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கடந்த 2021ம் ஆண்டு ரத்தினபுரியை சேர்ந்த ரவுடி குரங்கு ஸ்ரீராம் என்பவர் கொல்லப்பட்டார்.. அந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிதான் இவர்.

பழிக்குப்பழி
எனவே, பழிக்குப்பழி வாங்குவதற்காகவே, கோகுல் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது.. இதையடுத்து, குரங்கு ஸ்ரீராம் நண்பர் வட்டாரத்தின் முக்கிய நபர்களை போலீசார் குறிவைத்து விசாரிக்க துவங்கினர்.. அப்படி சிக்கியவர்தான் வினோதினி.. இவருக்கு தமன்னா என்று இன்னொரு பெயரும் உண்டு. 23 வயதாகிறது.. நர்சிங் படித்துள்ளார்.. ஆனாலும், தன்னுடைய ஆண்நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, சமூக விரோத குற்றங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.. குறிப்பாக, பீளமேடு பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு, முறைகேடாக பணம் சம்பாதித்து வந்திருக்கிறார்.

ரீல்ஸ் வீடியோ
இதையடுத்து, கடந்த வருடம் இவரை போலீசார் கைது செய்தனர்.. ஆனால், ஜெயிலுக்கு சென்றுவிட்டு, ஜாமீனில் வந்த தமன்னா, திருந்தவில்லை.. மாறாக, முன்பைவிட அதிகமான குற்றச்செயல்களில் ஈடுபட ஆரம்பித்தார்... மேலும் சோஷியல் மீடியாவில் ரவுடி குரூப்களுடன் சேர்ந்து கொண்டு, நிறைய ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு, வந்துள்ளார்.. கையில் அரிவாள், வாயில் சிகரெட் என ஏராளமான வீடியோக்களை பதிவிட்டதுடன், பகையை தூண்டும் வகையில் அந்த வீடியோக்களையும் வெளியிட்டு பதற்றத்தையும் உருவாக்கினார்.

அதென்ன வாயிலே
இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் கத்தி, அரிவாள் என ஆயுதங்களுடன் தோன்றியதுடன், ஆட்சேபகரமாகவும் பேசி சிலருக்கு மிரட்டல் விடுக்கவும் செய்தார்.. இதையடுத்து, தமன்னாவை பிடிக்க கோவை போலீசார் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர்.. போலீசார் தன்னை தேடுகிறார்கள் என்பதையும் அறிந்து கொண்ட தமன்னா, ஒரு வீடியோவை பேசி வெளியிட்டு தன்னிலை விளக்கம் தந்திருந்தார்.. அதில், "கஞ்சா வழக்கில் கைதாகி ஜெயிலுக்கு சென்றேன். சிறையில் இருந்து திரும்பியதுமே, ஆட்சேபகரமான வீடியோக்கள் எதையும் நான் வெளியிடவில்லை.

கர்ப்பம்
ஆனாலும் போலீசார் என்னை தேடுகிறார்கள். என் நண்பர்கள் சிலரை போலீஸ் ஸ்டேஷனில் பிடித்து வைத்துக்கொண்டு விட மறுக்கிறார்கள். நான் வந்தால் மட்டுமே அவர்களை விடுவிப்போம் என்று போலீஸ் சொல்கிறார்களாம்.. நான் முன்பு போல கிடையாது.. இப்போது நான் திருந்திவிட்டேன்.. நிறைய மாறிவிட்டேன்.. எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது.. கணவருடன் வாழ்ந்து வருகிறேன்.. இப்போது நான் 6 மாத கர்ப்பமாகவும் இருக்கிறேன்.. வீடியோ எதையும் நான் இப்போது போடவுமில்லை.. திருந்தி வாழும் என்னை போலீசார் தேட வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டிருந்தார். எனினும், தமன்னாவை பிடிக்க கோவை போலீசார் தீவிரமாகி கொண்டேயிருந்த நிலையில், சங்ககிரியில் தமன்னா பதுங்கியிருப்பதாக தகவல் வரவும், அங்கு விரைந்த தனிப்படையினர், சுற்றி வளைத்து கைது செய்தனர்..

கண்டிஷனல் பெயில்
அதாவது, கடந்த 2021ம் ஆண்டு போடப்பட்ட கஞ்சா வழக்கில்தான் தமன்னாவை கைது செய்தனர்.. பிறகு, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள இன்றியமையா பண்டகங்கள் நீதிமன்றத்தில் தமன்னாவை போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி லோகேஷ்வரன், வினோதினி என்கின்ற தமன்னாவை நீதிமன்ற காவலில் அடைத்து உத்தரவிட்டார்... இதனிடையே, தான் 6 மாத கர்ப்பிணி என்றும்,ள ஜாமீன் கோரியும் மனுத்தாக்கல் செய்தார் தமன்னா.. இந்த ஜாமீன் மனுவை இன்று விசாரித்த நீதிமன்றமும், மறு உத்தரவு வரும் வரை தினமும் பீளமேடு ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியிருக்கிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications