பயங்கர ஷாக்.. 24வது மாடியில் இருந்து குதித்து கோவை பொறியாளர் தற்கொலை.. தைவானில் நடந்த சோகம்
கோவை: தைவானில் பொறியாளராக பணியாற்றி வந்த கோவை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் 24 வது மாடி கட்டடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகையை சேர்ந்தவர் ராகுல் ராம். இவர் தைவான் நாட்டில் வேலைக்கு சென்றார். தைவானில் அவர் பொறியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தான் ராகுல் ராம் தைவான் நாட்டில் திடீரென்று தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது ராகுல் ராம் 24வது மாடி கட்டடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதும், இதில் அவர் படுகாயமடைந்து இறந்ததும் தெரியவந்தது. ராகுல் ராம் தற்கொலை குறித்து சிறுமுகையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ராகுல் ராமின் உடலை கோவைக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ராகுல் ராமின் உடலை தைவானில் இருந்து கோவைக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையை எடுத்துள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்).












Click it and Unblock the Notifications