கோவையில் 2 சொகுசு கார்களுடன் எஸ்கேப் ஆன யூடியூபர்.. நம்பவே முடியாத அளவிற்கு நண்பருக்கு நடந்த துரோகம்
கோவை: கோவை கணபதி பாரதி நகரை சேர்ந்த வினோத் குமார் என்பவர் அந்த பகுதியில் உள்ள பால் பண்ணையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சந்தோஷ்குமார் என்ற யூடியூபர் நட்பாக பழகி உள்ளார். யூ-டியூபர் சந்தோஷ்குமாருக்கு, வினோத்குமார், தனது இரண்டு சொகுசு கார்களை இரவலாக கொடுத்துள்ளார். அதில் உதிரி பாகங்ககளை மாற்றி தருவதாக வாங்கி சந்தோஷ்குமார் தலைமறைவாகி விட்டாராம்.. இந்த விவகாரத்தில் யூடியூபர் சந்தோஷ்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இன்றைக்கு சிலர் கார்களை வாடகைக்கு எடுத்து அடமானம் வைப்பது,இரவல் வாங்கிக் கொண்டு அதனை வெளியில் விற்றுவிடுவது, கார்களை உதிரிபாகங்களை விற்று ஏமாற்றுவது இப்போது பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. எனவே நண்பர்கள் கேட்பதாக கார்களை கொடுக்க வேண்டாம் என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.. கார்களின் விலை மிகப்பெரிய அளவில் இருப்பதால் ஏமாற்றுவதும், ஏமாற்றங்களை ஏற்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. கோவையில் நடந்த சம்பவம் பற்றி இதில் பார்ப்போம்.

கோவை கணபதி பாரதி நகரை சேர்ந்தவர் வினோத் குமார் என்பர் அங்குள்ள ஒரு பகுதியில் பால் பண்ணை ஒன்றியல் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். பால் பண்ணை மேலாளர் வினோத் குமாருக்கு, கோவை உடையாம்பாளையத்தை சேர்ந்த 37 வயதாகும் சந்தோஷ்குமார் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இருவரும் நட்பாக பழகி உள்ளார்.
சந்தோஷ் குமார் தன்னை யூ-டியூபர் என்று வினோத் குமாரிடம் அறிமுகம் ஆகித்தான் பழகி உள்ளார். தன்னுடைய வீடியோக்கள் மூலம் விளம்பரம் செய்து தருவதாகவும் வினோத்குமாரிடம் சந்தோஷ்குமார் கூறினாராம். அத்துடன் சில யூ-டியூபர்களையும் அழைத்து வந்து, அந்த பால் பண்ணைக்கு விளம்பரம் செய்து கொடுத்தாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் யூடியூபர் சந்தோஷ்குமார் பழைய வாகனங்களை விற்கும் தொழில் செய்து வருவதாக கூறினாராம் குறைந்த விலையில் வாகன உதிரி பாகங்கள் வாங்கி தருவதாக வினோத் குமாரிடம் கூறினாராம். இதை நம்பிய பால் பண்ணை மேலாளர் வினோத் குமார் தங்களது நிறுவனத்திற்கு சொந்தமான 2 சொகுசு கார்களை உதிரிபாகங்கள் மாற்ற அவரிடம் கொடுத்தாராம். மேலும் அதற்கு ரூ.3 லட்சத்து 70 ஆயிரமும் வழங்கினாராம்.
அதன்பிறகு பல நாட்கள் ஆகியும் சந்தோஷ்குமார் கார்களை ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது.. அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் ஆகியிருந்தது. இதுகுறித்து விசாரித்த போது அவர் பல மோசடிகளில் ஈடுபட்டு இருப்பது வினோத்குமாருக்கு தெரியவந்தது. உடனே கோவை சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications