Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

”டேய்.. யார்டா அது? ஆஃப் பண்ண சொல்லுடா” - லைவில் TTF வாசன் டென்சன்.. இந்த வயசுல இவ்ளோ கோபமா?

Subscribe to Oneindia Tamil

கோவை: பிரபல யூடியூபர் TTF வாசன் நேற்று தனது ரசிகர்களுடன் லைவில் பேசும்போது கோபப்பட்டு கத்திய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Recommended Video

    Who Is TTF Vasan? | TTF Vasan-க்கு Police கொடுத்த Warning | TTF Fans Meet *TamilNadu

    கோவையை சேர்ந்த வாசன் என்ற இளைஞர் பைக்கில் அதிக வேகத்தில் சாகசம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து Twin Throttlers என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கி வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

    இவர் வெளியிடும் வீடியோக்கள் பைக் மீது ஆர்வம் கொண்ட சிறுவர்கள், இளைஞர்களுக்கு பிடித்துவிட படிப்படியாக இவரது சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை உயரத் தொடங்கியது.

    27 லட்சம் சப்ஸ்கிரைபர்கள்

    27 லட்சம் சப்ஸ்கிரைபர்கள்

    தற்போது இவரது யூடியூப் சேனலுக்கு இருக்கும் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை 27 லட்சம். இருசக்கர வாகனத்திலேயே பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் இவர் பைக் சாகசங்கள் மட்டுமின்றி தனது பயண அனுபவங்களையும் VLOG ஆக பதிவிட்டு வந்தார். இவர் செல்லும் பகுதிகளில் எல்லாம் ரசிகர்களை சந்திப்பது வழக்கம். இப்படி யூடியூப்பில் உச்சத்துக்கு சென்ற இவர் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களையும் வாங்கி சாகச வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

    விமர்சனங்கள்

    விமர்சனங்கள்

    இவரது வீடியோக்கள் இளைஞர்களை ஆபத்தான பைக் சாகசங்களுக்கு தூண்டுவதாகவும், இளைஞர்கள், சிறுவர்களை இவர் தவறாக வழிநடத்துவதாக குற்றச்சாட்டுக்களும் உள்ளன. ஆனால், இவர் தனது வீடியோவிலேயே ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிய சொல்வதுடன் சாலை விதிகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தி வருகிறார். 27 லட்சம் சப்ஸ்கிரைபர்களை வைத்திருந்தாலும் இளைஞர்கள், சிறுவர்கள், பைக் ரைடிங்கில் ஆர்வம் கொண்டவர்களை தவிர்த்து பெரும்பாலான மக்கள் TTF வாசனை அறிந்திருக்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு வரை.

    பிறந்தநாள் கொண்டாட்டம்

    பிறந்தநாள் கொண்டாட்டம்

    இவர் 2 நாட்கள் முன்பாக தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் சந்திப்பை போலீசாரின் அனுமதியை பெற்று நடத்தி இருக்கிறார். இதற்கு தனது வீட்டிலிருந்து பைக்கில் தனது நண்பர்களுடன் அவர் புறப்பட்டார். செல்லும் வழிநெடுகிலும் பொதுமக்கள், சிறுவர்கள், பெண்களை அவரை வரவேற்று நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாடியதுடன், செல்பி எடுத்துக்கொண்டனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பிறந்தநாள் சந்திப்பு நடைபெறும் இடத்துக்கு சென்ற அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று திக்குமுக்காட வைத்தனர்.

    கோபப்பட்ட வாசன்

    கோபப்பட்ட வாசன்

    காவல்துறையினர் அங்கு வந்து TTF வாசனிடம் பேசி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டதுடன் ஊடகங்களிலும் செய்தியாக வந்தது. அதன் மூலம் அனைத்து தரப்பினராலும் அறியப்படும் முகமாக மாறி இருக்கிறார் TTF வாசன். இந்த நிலையில் நேற்று யூடியூப் லைவில் தனது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் இருந்த வீட்டருகே யாரோ ஒருவர் பைக்கை முறுக்கும் சத்தம் கேட்டது. இதனால் ஆத்திரமடைந்த வாசன், லைவிலேயே கோபப்பட்டு "டேய்.. யார்டா அது? ஆஃப் பண்ண சொல்லுடா" என்ற கத்தினார். அதன் பின்னர் 2K கிட் என செய்தி வெளியிட்ட ஊடகங்களையும் இவர் விமர்சித்து பேசியது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+