கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவை அரசு ஆஸ்பத்திரியில்.. 15 படுக்கைகளுடன் கூடிய ஜீரோடிலே வார்டு.. நோயாளிகள் காத்திருக்க தேவையில்லை

கோவை அரசு மருத்துவமனையில் ஜீரோ டிலே வார்டு அமைக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் 15 படுக்கைகளுடன் கூடிய ஜீரோ டிலே வார்டு அமைக்கப்பட்டுள்ளது.. நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் சூழலை தவிர்க்கவே இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதுமே 2வது தொற்று பரவல் தீவிரமாகி உள்ளது.. இதனால் அரசு ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன.. எனவே, படுக்கைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது..

சிகிச்சைக்கு வரக்கூடிய தொற்று நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.. இதில் தொற்று முற்றியவர்கள் ஆம்புலன்ஸிலேயே உயிரிழக்கும் கொடுமையும் நடந்து வருகிறது.

 தலைநகர் டெல்லியில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு.. மருத்துவமனைகளில் காலியாகும் படுக்கைகள் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு.. மருத்துவமனைகளில் காலியாகும் படுக்கைகள்

படுக்கைகள்

படுக்கைகள்

தொற்று பாதித்த மாவட்டங்களில் கோவையும் ஒன்று.. எப்படியும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.. அனைவருமே தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இதனால், மாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளிலும் இடமில்லாத நிலை உருவாகி உள்ளது. அனைத்து படுக்கைகளும் நிரம்பி விட்டன...

 மாற்று ஏற்பாடு

மாற்று ஏற்பாடு

இதுபோன்ற இடர்பாடுகளை தவிர்க்க, சிறப்பு மாற்று ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் நேற்று முன்தினம்கூட, தனியார் நிறுவனங்கள் 2 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பஸ்சை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கியுள்ளனர். ஆக்சிஜன் தேவையுடன் வரும் நோயாளிகளுக்கு உடனடியாக ஆக்சிஜன் வழங்கும் வகையில் தலா 12 ஆக்சிஜன் இருக்கை வசதிகளுடன் கூடிய 2 பஸ்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு நிறுத்தியும் வைக்கப்பட்டுள்ளன.

 ஜீரோ டிலே வார்டு

ஜீரோ டிலே வார்டு

இந்நிலையில், கோவை அரசு ஆஸ்பத்திரியில் இன்னொரு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.. அரசு மருத்துவமனையில் ஜீரோ டிலே வார்டு அமைக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் 2 தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.. அதன்படியே, கோவை அரசு ஆஸ்பத்திரியில் 15 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய ஜீரோ டிலே வாா்டு அமைக்கப்பட்டுள்ளது...

 கொரோனா வார்டு

கொரோனா வார்டு

இது குறித்து அம்மருத்துவமனை முதல்வர் நிர்மலா செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "கொரோனா நோய்த் தொற்றுடன் அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள், தனியார் மருத்துவமனைகளிலிருந்து பரிந்துரைக்கப்படுபவர்கள், இந்த ஜீரோ டிலே வார்டில் அனுமதித்து அதன் பிறகே கொரோனா வாா்டுக்கு அனுப்பப்படுவர்.

நோயாளிகள்

நோயாளிகள்

ஜீரோ டிலே வார்டிலேயே நோயாளிகளை டெஸ்ட் செய்து, ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள், சாதாரண படுக்கை தேவையுள்ள நோயாளிகள் என பிரிக்கப்படுவர்... இதனால் தேவையற்ற குழப்பங்கள் தவிர்க்கப்படும். தவிர நோயாளிகள் காத்திருக்கும் நிலையும் ஏற்படாது.. ஜீரோ டிலே வாா்டில் அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

English summary
Zero delay ward at Coimbatore Gov hospital to prevent patients death during waiting time
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X