கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உச்சக்கட்ட குழப்பம்! இன்று கூடிய இலங்கை நாடாளுமன்றம்! துணை சபாநாயகர் ராஜினாமா! தப்புமா ராஜபக்ச அரசு?

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றம் கூடியுள்ளது.

அண்டை நாடான இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட உச்சத்தில் உள்ளன.

சட்டசபை கூட்டம் ஏப்ரல் 6-ல் தொடங்கி மே 10 வரை நடைபெறும்! விடுமுறை நீங்கலாக மொத்தம் 22 நாட்கள்! சட்டசபை கூட்டம் ஏப்ரல் 6-ல் தொடங்கி மே 10 வரை நடைபெறும்! விடுமுறை நீங்கலாக மொத்தம் 22 நாட்கள்!

இலங்கை நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார பாதிப்பிற்கு கொரோனா பெருந்தொற்று தொடங்கிய கெமிக்கல் உரத்திற்குத் தடை விதிக்கப்பட்டது வரை பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

இலங்கை

இலங்கை

இதன் காரணமாக இலங்கை நாட்டின் அந்நிய செலாவணி மிக மோசமாக உள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மோசமான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. பெட்ரோல், டீசலை பெறக் கூட மக்கள் பல மணி நேரம் காத்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தான், அந்நாட்டிற்கு உதவும் வகையில் இந்தியா 40 ஆயிரம் டன் டீசலை அனுப்பி இருந்தது.

 எப்போது சீராகும்

எப்போது சீராகும்

இது மட்டுமின்றி அங்கு மிக மோசமான மின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை நாட்டில் பல்வேறு இடங்களில் 13 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை மின்தடை ஏற்பட்டுள்ளது. இக்கட்டான நிலையில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பல்வேறு உதவிகளைச் செய்து வரும் போதிலும், அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. நிலைமை சீர் செய்ய அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையிலும், நிலைமை எப்போது மேம்படும் என யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.

 புதிய அமைச்சரவை

புதிய அமைச்சரவை

இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை தொடர்ந்து மோசமாகி வருவதால் பொதுமக்கள் அனைவரும் அந்நாட்டு அரசுக்கு எதிராகத் திரும்பி போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் இலங்கை அரசு மீதான அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் இலங்கையில் உள்ள 32 அமைச்சர்களும் அப்படியே கூண்டோடு ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட அதிபர் கோட்டாபய ராஜபக்ச அனைத்து கட்சிகளைக் கொண்ட அரசை அமைக்க அழைப்பு விடுத்தார்,

 இலங்கை நாடாளுமன்றம்

இலங்கை நாடாளுமன்றம்

அதன்படி 4 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது. இந்தச் சூழலில் இலங்கை நாடாளுமன்றம் கூடியுள்ளது. இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.

Recommended Video

    Srilanka Political Crisis : Mahinda Rajepaksa ராஜினாமா செய்தது உண்மையா? பிரதமர் அலுவலகம் விளக்கம்
    துணை சபாநாயகர் ராஜினாமா

    துணை சபாநாயகர் ராஜினாமா

    இலங்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசு நடைபெற்று வந்த நிலையில், பல கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை இழக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. முன்னதாக நாடாளுமன்ற கூட்டம் தொடங்கும் முன் இலங்கை துணைச் சபாநாயகர் ரஞ்சித் சியம்பல பிட்டிய தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல ராஜபக்ச அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும் அறிவித்துள்ளது

    English summary
    Sri lanka Parliment to meet today, amid heavy economic crisis: (இலங்கையில் நிலவும் மிக மோசமான பொருளாதார நெருக்கடி) Sri lanka President Gotabaya Rajapaksa’s Government faces a crucial day in Parliament.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X