இலங்கையின் புதிய பிரதமரானார் தினேஷ் குணவர்தன- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவின் பள்ளிக்கூட சகா!
கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன இன்று பதவியேற்றார். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவின் பள்ளிக்கூட சகா தினேஷ் குணவர்தன.
இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டே நிலைமை கையை மீறிப் போகும் எனக் கூறப்பட்டது.
இருப்பினும், கடந்த ஆண்டு நிலைமையைச் சமாளித்துவிட்டனர். இந்த ஆண்டு நிலைமையைக் கட்டுக்குள் வைக்க முடியவில்லை..இந்த ஆண்டு தொடக்கம் முதலே இலங்கையின் நிலைக் கையைவிட்டுப் போகத் தொடங்கியது. எரிபொருள், மின்சாரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் இலங்கையில் பல பகுதிகளில் பல மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. தொடரும் மின்வெட்டால் இலங்கையின் தொழிற்துறை அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கும் கூட அங்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பதவி விலகிய தலைகள்
இதனால் மக்கள் சொல்லில் அடங்காத இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடி அங்கு அரசியல் நெருக்கடிக்கும் வழிவகுத்து உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாகவே இலங்கை மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதலில் இலங்கை நாட்டின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். இதையடுத்து ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், அவரால் நிலைமையைச் சரி செய்ய முடியவில்லை.

புதிய அதிபராக ரணில்
இதனால் மக்கள் போராட்டம் அடுத்த கட்டத்திற்குச் சென்றது. இதையடுத்து வேறுவழியின்றி இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்து, வெளிநாட்டிற்கும் தப்பி ஓடி உள்ளார். இதனைத் தொடர்ந்து புதிய அதிபராக, ரணில் விக்கிரமசிங்கே எம்.பிக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் ரணில் வசம் இருந்த பிரதமர் பதவி காலியானாது.

தினேஷ் குணவர்த்தன
இந்தச் சூழலில் இலங்கையின் புதிய பிரதமராக மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை இன்று நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் ரணில் விக்கிரமசிங்கே முன்னிலையில் இன்று தினேஷ் குணவர்தன பதவியேற்றார். 1949-ம் ஆண்டு பிறந்த தினேஷ் குணவர்த்தன் அடிப்படையில் தொழிற்சங்கவாதியாவார். ரணில் விக்கிரமசிங்கே படித்த அதே ராயல் கல்லூரியில் படித்தவர். நெதர்லாந்து, அமெரிக்காவில் கல்வி பயின்றவர்.
Recommended Video

யார் இந்த தினேஷ் குணவர்த்தன
பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்தன, 1973-ல் அரசியலில் நுழைந்தாலும் 1983ஆம் ஆண்டு முதல்முறையாக இலங்கை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 1994 தேர்தலில் அவர் தோல்வி அடைந்து இருந்த போதிலும், 2000 முதல் தொடர்ச்சியாக அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 73 வயதாகும் தினேஷ் குணவர்தன கடந்த காலங்களில் உள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications