கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 702 ஆக அதிகரிப்பு

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 702 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் இலங்கையில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்தது. இதற்கு காரணம் கடற்படையினரிடையே வேகமாக பரவிய கொரோனா தொற்றுதான்.

Coronavirus cases in Sri Lanka rises to 702

இலங்கை கடற்படையில் நூற்றுக்கணக்கான வீரர்களுக்கு கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 702 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் கொரோனாவால் மரணித்தோர் எண்ணிக்கை 7.

இதனிடையே இலங்கை ரத்தினபுரி பகுதியில் எலிக் காய்ச்சல் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 5 மாதங்களில் 280 பேர் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு ஏன்?.. சிறப்பு அதிகாரி பரபரப்பு பேட்டிசென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு ஏன்?.. சிறப்பு அதிகாரி பரபரப்பு பேட்டி

இந்நிலையில் மஹர சிறைச் சாலையில் இருந்து 6 சிறைக் கைதிகள் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களைத் தடுக்க முயன்ற சிறைத்துறையினர் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையும் மீறி கைதிகள் தப்பிச் செல்ல முயன்றனர். இதில் படுகாயமடைந்த கைதி ஒருவர் உயிரிழந்தார்.

English summary
The total number of Coronavirus infections in the country rose to 705.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X