"சீக்ரெட் லேப் ஆய்வு?" இலங்கையிடம் இருந்து.. திடீரென ஒரு லட்சம் குரங்குகளை வாங்கி குவிக்கும் சீனா
கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை நாட்டிடம் இருந்து திடீரென ஒரு லட்சம் குரங்குகளைச் சீனா வாங்கவுள்ளது. இதற்கு அந்நாட்டின் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.
Recommended Video
நமது அண்டை நாடான இலங்கை இப்போது மிக மோசமான ஒரு இடத்தில் உள்ளது. அங்கே கடந்தாண்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக மோசமான ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

இந்த பொருளாதார நெருக்கடி மக்கள் போராட்டத்திற்கு வழிவகுக்க அது பெரிய அரசியல் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் அங்குள்ள அதிபர் நாட்டை விட்டே தப்பிச் செல்லும் சூழல் எல்லாம் கூட ஏற்பட்டது.
ஒரு லட்சம் குரங்குகள்: இப்போது இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்று நிலைமையைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் கூட இன்னும் அங்கே நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. இலங்கை இந்தளவுக்குப் பொருளாதார நெருக்கடியில் சிக்க சீனா அளித்த அதிகப்படியான கடனும் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனிடையே இப்போது இலங்கையிடம் இருந்து சீனா அழியும் நிலையில் இருக்கும் ஒரு லட்சம் குரங்குகளை வாங்க உள்ளதாகத் தகவல் வெளியானது.
இதனிடையே இந்த தகவலை இப்போது இலங்கை அரசு உறுதி செய்துள்ளது. இதற்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சீனாவின் விலங்கியல் பூங்காவுடன் தொடர்புள்ள தனியாருக்குச் சொந்தமான சீன நிறுவனம் ஒன்று தனது அமைச்சகத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக இலங்கை விவசாய துறை அமைச்சர் குணதாச சமரசிங்க தெரிவித்தார்.
இலங்கை அதிகாரிகள்: இது குறித்து அவர் கூறுகையில், "ஒரு லட்சம் குரங்குகளையும் ஒரே நேரத்தில் அனுப்ப மாட்டோம். ஆனால் நாட்டின் பல பகுதிகளில் குரங்குகளால் பயிர் சேதம் ஏற்பட்டதால் இந்த கோரிக்கையைப் பரிசீலனை செய்துள்ளோம். அவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து எடுக்கப்படாது. சாகுபடி பகுதிகளில் இருக்கும் குரங்குகளை மட்டுமே அளிப்போம்" என்றார்.
டோக் மக்காக் குரங்கு வகையைத் தீன் சீனா இப்போது கேட்டுள்ளது. இலங்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த வகை குரங்குகள் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் சிவப்பு பட்டியலில் அதாவது அழியும் தறுவாயில் உள்ள ஆபத்தான பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பூங்காவிற்கா அல்லது சோதனைக்கா? கடந்த வாரம், இலங்கையின் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, சீனா தனது 1,000 உயிரியல் பூங்காக்களில் காட்சிப்படுத்த 1,00,000 குரங்குகளைக் கேட்டிருந்ததாகக் கூறியிருந்தார். சீன நாட்டில் உயிருள்ள விலங்கு ஏற்றுமதிகள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சீனா இப்போது வரலாற்றிலேயே இல்லாத மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், சீனா இந்த கோரிக்கையைக் கேட்டுள்ளது.
பணப்பற்றாக்குறை உள்ள இலங்கை இந்த ஆண்டு அதன் பாதுகாக்கப்பட்ட பட்டியலில் இருந்து பல வகை விலங்குகளை நீக்கியுள்ளது.. அதன் மூன்று குரங்கு இனங்கள் மற்றும் மயில்கள், காட்டுப்பன்றிகள் இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, பயிர்களை அழித்தால் அவற்றை கொல்ல விவசாயிகளுக்கு அனுமதித்துள்ளது. டோக் மக்காக் இன குரங்குகள் இலங்கையின் பல பகுதிகளில் பயிர்களை அழிப்பதாகப் புகார்கள் இருந்து கொண்டே இருக்கிறது. சில சமயங்களில் அவை மக்களையும் தாக்கியுள்ளன.
20 முதல் 30 லட்சம்: இலங்கையில் உள்ள குரங்குகளின் எண்ணிக்கை 20 முதல் 30 லட்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், கொழும்பில் உள்ள சீன தூதரகம், பரிசோதனை நோக்கங்களுக்காகச் சீன தனியார் நிறுவனத்திற்கு ஒரு லட்சம் அழிந்து வரும் டோக் மக்காக் குரங்குகளை இலங்கை ஏற்றுமதி செய்வது குறித்து தமக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ளது.
சீனாவில் வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியைக் கண்காணிக்கும் சீன தேசிய வனவியல் நிர்வாகத்திற்கு இலங்கையில் இருந்து குரங்குகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் எந்தவொரு கோரிக்கைகள் வரவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.. மேலும், சீன அரசு எப்போதும் வனவிலங்கு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் இந்த சர்வதேச கடமைகளைத் தீவிரமாக நிறைவேற்றுகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
-
மூழ்கடிக்கப்படும் ரூ.63,000 கோடி.. கடலுக்கு அடியில் அமையும் 73,000 டன் பிரம்மாண்டம்! என்ன மேட்டர் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications