கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீவிரவாதத்தை வேரறுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.. இலங்கை அதிபர் வேண்டுகோள்

Google Oneindia Tamil News

கொழும்பு: இன, மத, அரசியல் என பல பிரிவுகளுக்கு ஆட்படாமல் தீவிரவாதத்தை அழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறி வைத்து இலங்கையில், தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்திய சுவடுகள் மறைவதற்குள், பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

Everyone should get together to destroy terrorism Says Maithripala Sirisena

இந்தநிலையில், மத்திய மாகாணத்தின் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், இலங்கை நாட்டில் இருந்து தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்கு பாதுகாப்பு படையினர் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

5 நட்சத்திர விடுதியில் தீவிரவாதிகள் அட்டாக்... பாகிஸ்தானில் பயங்கரம் 5 நட்சத்திர விடுதியில் தீவிரவாதிகள் அட்டாக்... பாகிஸ்தானில் பயங்கரம்

இலங்கையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும், தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

English summary
Sri Lankan President Maithripala Sirisena has said that everyone should get together to destroy terrorism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X