Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கையில் நடந்தது மனி ஹீஸ்டா? கட்டுக்கட்டாக உகாண்டாவுக்கு 3 விமானங்களில் பறந்த பணம் - பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: கட்டுக்கட்டாக இலங்கை பணம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் உகாண்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டது ஏன் என இலங்கை மக்கள் சந்தேகம் கிளப்பி வரும் நிலையில் அதுகுறித்து பிரிட்டன் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

Recommended Video

    கட்டுக்கட்டாக Uganda-வுக்கு 3 விமானங்களில் பறந்த பணம்-பின்னணி | Oneindia Tamil

    இலங்கை கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. தற்போது இது அரசியல் நெருக்கடியாகவும் உருவெடுத்து இருக்கிறது.

    உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.

    இலங்கையின் நிலை

    இலங்கையின் நிலை

    இலங்கையில் பொருளாதார சூழல் மோசமடைந்து இருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததுடன் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. உணவு மற்றும் எரிபொருட்கள் கிடைக்கவில்லை. பொருளாதார மந்தநிலையால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஏராளமானோருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகளில் எரிபொருட்கள் கிடைக்காததால் போக்குவரத்தும் முடங்கி இருக்கிறது. இதனால் மக்கள் வெளியில் வர முடியாமல் வீடுகளுக்குள் அடைபட்டு கிடக்கின்றனர். மின் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.

    போராட்டங்களால் விழிபிதுங்கும் அரசு

    போராட்டங்களால் விழிபிதுங்கும் அரசு

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. கடந்த சில 10 ஆண்டுகளில், தமிழ் - சிங்களர்கள் மோதல், பௌத்தர்கள் - இஸ்லாமியர்கள் மோதலால் மொழி, மத ரீதியாக பிளவுபட்டு கிடந்த இலங்கை மக்கள், தற்போது அனைத்து வேற்றுமைகளையும் தூக்கி எரிந்துவிட்டு நாட்டுக்காக வீதியில் இறங்கி இருக்கின்றனர்.

     சாமானியர்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை

    சாமானியர்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை

    இலங்கை மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் இல்லை என்று கூறி அரசு மருத்துவ அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இலங்கை அரசுக்கு எதிராகவும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். இதேபோல் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.

    இலங்கையில் நடந்தது மனி ஹீஸ்டா?

    இலங்கையில் நடந்தது மனி ஹீஸ்டா?

    இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கட்டுக்கட்டான பணம் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 3 கார்கோ விமானங்களின் வாயிலாக இலங்கையிலிருந்து ஆப்பிரிக்க நாடான உகாண்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இலங்கை மக்கள் அதுகுறித்து சமூக வலைதளங்களில் சந்தேகம் எழுப்பினர்.

    பிரிட்டன் நிறுவனம் விளக்கம்

    பிரிட்டன் நிறுவனம் விளக்கம்

    இதுகுறித்து பிரிட்டனை சேர்ந்த நாணயம் அச்சிடும் நிறுவனமான டே லா ரூ (DE LA RUE) விளக்கமளித்து இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள பாதிக்கும் மேற்பட்ட நாடுகளின் மத்திய வங்கிகளுக்கு நாணயத்தை அச்சிட்டு வழங்கி வரும் அந்த நிறுவனம் இலங்கை, கென்யா, மால்டா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் அச்சகங்களை வைத்து உள்ளது. இந்த நிலையில் இலங்கையின் அச்சகத்தில் அச்சிடப்பட்ட உகாண்டா நாட்டு நாணயங்களே விமானங்களில் கொண்டு செல்லப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மனி ஹீஸ்ட்

    மனி ஹீஸ்ட்

    ஸ்பானிஷ் வெப் சீரீஸான மனி ஹீஸ்டின் முதல் பாகத்தில் ஸ்பெயின் நாட்டின் நாணயத்தை அச்சிடும் இடத்தை திருடர்கள், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அங்குள்ளவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு நாணயங்களை அச்சடித்துவிட்டு கட்டுக்கட்டான பணத்துடன் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+