கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கையில் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கலாம்.. உளவுத்துறை எச்சரிக்கை.. முழு ராணுவமும் களமிறங்கியது!

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் விரைவில் அடுத்தகட்ட தீவிரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இலங்கையில் குண்டுவெடிப்பால் ஏற்பட்ட காயங்கள் இன்னும் ஆறவில்லை. மக்கள் இன்னும் அந்த பெரிய தாக்குதலின் வடுக்களில் இருந்து வெளியே வரவில்லை.

கடந்த ஞாயிறுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 300க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

அவர் இருந்திருந்தால் இலங்கையில் இப்படி நடந்திருக்காது? கொந்தளிக்கும் ராஜபக்சே.. யாரை சொல்கிறார்? அவர் இருந்திருந்தால் இலங்கையில் இப்படி நடந்திருக்காது? கொந்தளிக்கும் ராஜபக்சே.. யாரை சொல்கிறார்?

என்ன சொன்னார்கள்

என்ன சொன்னார்கள்

இந்த தாக்குதல் குறித்து இலங்கை அரசுக்கு அந்நாட்டு உளவுத்துறை ஏற்கனேவே எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஏப்ரல் முதல் வாரத்தில் இது தொடர்பாக முதல்முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பின் தாக்குதல் நடப்பதற்கும் முதல்நாள் இலங்கை அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.

மீண்டும் நடக்கும்

மீண்டும் நடக்கும்

இந்த நிலையில் இலங்கையில் விரைவில் அடுத்தகட்ட தீவிரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த முறை தாக்குதல் தேவாலயங்களில் நடக்க வாய்ப்பில்லை. பெரும்பாலும் பொது இடங்களில்தான் தாக்குதல் நடக்கும் என்று அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உளவுத்துறை தகவல்

உளவுத்துறை தகவல்

இது தொடர்பாக உளவுத்துறை அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகமான சிஎன்என் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், இலங்கை தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது. இவர்கள் மீண்டும் தாக்குதல் நடத்த போவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது.

ராணுவம் குவிப்பு

ராணுவம் குவிப்பு

உள்ளூர் அமைப்பு ஒன்றுடன் சேர்ந்து இவர்கள் இலங்கையில் தாக்குதல் நடத்தலாம், என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் இலங்கையில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் அனைத்து பகுதியில் இருந்தும் ராணுவம் கொழும்பில் குவிக்கப்பட்டுள்ளது.

English summary
IS was planning a second wave of attacks in Sri Lanka, says a high-level intelligence official.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X