இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே நாளை ராஜினாமா? நாடாளுமன்றத்தில் அறிவிப்பு?
கொழும்பு: இலங்கையில் அதி உச்சத்தை எட்டியுள்ள பொருளாதார நெருக்கடிகள், மக்கள் கிளர்ச்சிகளை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ந்நாளை பதவி விலகக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சே சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
இலங்கை அரசாங்கத்தின் அபரிதமான வெளிநாட்டு கடன்கள், கொரோனா கால பொருளாதார நெருக்கடி ஆகியவை அந்த நாட்டையே சீரழித்துவிட்டது. இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்தும் தட்டுப்பாடும் நிலவுகிறது. ஆகையால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் என்பது அந்நாட்டு மக்களின் கோரிக்கை.

இதனை வலியுறுத்தி இலங்கையின் அனைத்து பகுதிகளும் போர்க்களமாகி இருக்கின்றன. தலைநகர் கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த் 25 நாட்களாக இரவும் பகலுமாக பொதுமக்கள் அதே இடத்தில் முற்றுகையிட்டு இடைவிடாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை போலீசை ஏவி ஒடுக்க முயற்சித்தது ராஜபக்சேக்கள் அரசாங்கம். ஆனால் இதனை பொதுமக்கள் முறியடித்து போலீசாரை ஓடஓடவிரட்டியடித்தனர்.
இதனிடையே தமது பதவியை மட்டும் காப்பாற்றிக் கொண்டு அண்ணன் ராஜபக்சேவை பலிகடாவாக்குவதில் கோத்தபாய ராஜபக்சே படுமுனைப்பாக இருந்து வருகிறார். இது தொடர்பான அரணமனை சதி ஆலோசனைகளையும் கோத்தாபய மேற்கொண்டும் வருகிறார். மகிந்த ராஜபக்சேவை பதவியில் இருந்து விரட்டிவிட்டு இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது என்பது கோத்தபாயவின் திட்டம்.
இந்நிலையில்தான் இலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தில் மகிந்த ராஜபக்சே சிறப்பு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய அனுமதி கோரியிருக்கிறார். இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே நாளை ராஜினாமா செய்வார்; அது தொடர்பான அறிக்கையைத்தான் நாளை நாடாளுமன்றத்தில் அவர் தாக்கல் செய்ய உள்ளார் என்கின்றன கொழும்பு வட்டாரங்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications