கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினி இங்கே தாராளமா வரலாமே.. ராஜபக்சே மகன் திடீர் டிவீட்.. என்ன பிளானோ.. என்ன நடக்க போகுதோ!

ரஜினி தாராளமா இலங்கைக்கு வரலாம் என ராஜபக்சே மகன் கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

கொழும்பு: "நானும் எனது தந்தையும் ரஜினிகாந்த்துக்கு ரசிகர்கள். அவர் தாராளமாக இலங்கைக்கு வரலாம் . அதற்கு எந்தத் தடையும் இல்லை" என்று இலங்கை பிரதமர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே கூறியுள்ளார்.

ரஜினி இன்னும் அரசியலுக்கும் வரவில்லை. கட்சியும் ஆரம்பிக்கவில்லை. ஆனால் அவரை வைத்து நடந்து வரும் அரசியலுக்கு மட்டுமே ஓய்வே இல்லை. கடந்த பல வருடங்களாக இதுதான் நடந்து வருகிறது.

namal rajapaksa clarifies about rajinis visit

இந்த அரசியலைப் பார்த்து ரஜினி ரசிகர்கள் ஒருபக்கம் பெருமைப்பட்டுக் கொண்டாலும் கூட, இதனால் தங்களுக்கும், ரஜினிக்கும் ஒரு பிரயோஜனமும் இல்லை என்ற ஆதங்கமும் அவர்களை விட்டுப் போகவில்லை.

சமீப காலமாக ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் வேலைகள் முழு வேகம் பிடித்துள்ளன. அவரும் முடிந்தவரை தள்ளிப் போட்டுக் கொண்டேதான் போகிறார். இந்த நிலையில்தான் சமீபத்தில் சென்னைக்கு வந்தார் முன்னாள் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன். அவர் ரஜினியை சந்தித்துப் பேசினார். தமிழக அரசியல் தலைவர்களை விட ரஜினிக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தது அனைவரையும் அதிர வைத்தது.

அப்போது அவர் ரஜினியை இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார். ஆனால் ரஜினிக்கு விசா தர இலங்கை அரசு மறுத்து விட்டதாக திடீரென ஒரு தகவல் பரவியது. ஆனால் இது வதந்தி என்று பின்னர் விளக்கம் வந்தது. இந்த நிலையில் பிரதமர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே ஒரு டிவீட் போட்டுள்ளார். அதிலும் தமிழில் போட்டுள்ளார்.

அதில், "நடிகர் #Rajinikanth இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை, அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையுமில்லை. நானும் எனது தந்தையாரும் திரு. ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம், ஒரு தடையுமில்லை" என்று நமல் ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி எங்களிடம் விசா கேட்டு விண்ணப்பிக்கவில்லை.. அது வதந்தி.. இலங்கை அரசு விளக்கம்! ரஜினி எங்களிடம் விசா கேட்டு விண்ணப்பிக்கவில்லை.. அது வதந்தி.. இலங்கை அரசு விளக்கம்!

இதற்கு பல கருத்துக்கள் உடனுக்குடன் வந்து குவிந்துள்ளன. சிலர் பேசாமல் ரஜினியை இலங்கையிலேயே வச்சுக்கோங்க என்றும் நக்கலடித்துள்ளனர். சிலர் வரவேற்றுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர்.

நமல் ராஜபக்சே சொல்வதைப் பார்த்தால் ரஜினியை வைத்து இலங்கையிலும் ஒரு பாலிட்டிக்ஸ் வெடிக்கும் போலத் தெரிகிறது. என்ன மாதிரியான திட்டம் இதன் பின்னணியில் இருக்கிறது என்றும் புரியவில்லை. ஆனால் என்னமோ நடக்க போகிறது.. அது யாருக்கு.. என்பதுதான் காத்திருந்து வேடிக்கை பார்க்க வேண்டிய மேட்டர். பார்க்கலாம்.

English summary
"Rajini may come to Sri Lanka, I am his fan" namal rajapaksa clarifies about rajinis visa rejection issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X