இந்தியாவிற்கு வாங்க.. அழைப்பு விடுத்த மோடி.. ஓகே சொன்ன கோத்தபய ராஜபக்சே.. அடுத்த வாரம் வருகிறார்!
Recommended Video
கொழும்பு: இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் இந்தியா வருகிறார். அடுத்த வாரம் 29ம் தேதி இந்தியா வரும் கோத்தபய ராஜபக்சே பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே இரண்டு நாட்களுக்கு முன் பதவி ஏற்றார். இலங்கை அதிபர் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். 52.25 சதவீத வாக்குகளை பெற்று கோத்தபய வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வி அடைந்துள்ளார். சஜித் பிரேமதாசாவுக்கு 41.99 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்சே 6924255 வாக்குகள் பெற்றார்.

திடீர் சந்திப்பு
இந்த நிலையில் இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கொழும்புவில் அங்கு தலைவர்களுடன் சந்திப்பு நடத்தினார். கோத்தபய ராஜபக்சே-வை நேற்று சந்தித்துப் பேசினார். இரண்டு நாட்டு உறவுகள் குறித்து இவர்கள் சுமார் 1 மணி நேரம் பேசினார்கள்.

அரசியல் சூழ்நிலை
அதேபோல் இலங்கையின் அரசியல் சூழ்நிலை குறித்து இவர்கள் தீவிரமாக நீண்ட நேரம் பேசினார்கள். அதன்பின் பிரதமர் மோடியின் சார்பில் இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை கோத்தபய ராஜபக்சே ஏற்றுக் கொண்டார்.

எப்போது வருகிறார்
இந்த நிலையில் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் இந்தியா வருகிறார். அடுத்த வாரம் 29ம் தேதி இந்தியா வரும் கோத்தபய ராஜபக்சே பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். கோத்தபய ராஜபக்சேவின் முதல் வெளிநாட்டு பயணமாக இது அமைய போகிறது. இரண்டு நாட்டு உறவுகள் குறித்து இவர்கள் ஆலோசிக்க உள்ளனர்.

சீனா நெருக்கம்
கோத்தபய ராஜபக்சே சீனாவிற்கு நெருக்கமானவர். சீனாவின் தலைவர்களுக்கும் ராணுவத்திற்கும் இவர் செல்லப்பிள்ளை என்று புகார் உள்ளது. இவர் அதிபரானது இந்தியாவிற்கு சிக்கலாகும் என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரித்தனர். இந்த நிலையில்தான் அவர் இந்தியா வருகிறார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications