வெட்கமே இல்லாத பாகிஸ்தான்.. காலாவதியான பொருட்களை நிவாரணமாக இலங்கைக்கு அனுப்பியதால் ஷாக்
கொழும்பு: ‛டிட்வா' புயல் காரணமாக அண்டை நாடான இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 300க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ள நிலையில் நாடு முழுவதும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இலங்கைக்கு நம் நாடு உதவி வருகிறது. நம் நாட்டை போல் உதவுதாக கூறிய பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை நிவாரணமாக அனுப்பி இருப்பதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
தென்மேற்கு வங்கடலில் உருவான " டிட்வா" புயல் இலங்கையை புரட்டிப்போட்டது. இந்த புயல் தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதி வழியாக வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. இதனால் இலங்கையின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. நிலச்சரிவு ஏற்பட்டது.

இடைவிடாது கொட்டிய கனமழையால் தீவு தேசமான இலங்கை வெள்ளத்தில் மிதக்கிறது. தற்போது வரை 300க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் மாயமாகி உள்ளனர். பல ஆயிரம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடரில் சிக்கி உள்ள இலங்கைக்கு நம் நாடு உதவி செய்து வருகிறது. நம் நாட்டின் சார்பில் இலங்கைக்கு ‛ஆபரேஷன் சாகர் பந்து' என்ற யெபரில் மொத்தம் 53 டன் அளவுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. விமானப்படை, கப்பற்படை மூலமாக இந்த நிவாரண பொருட்கள் நவம்பர் 28 ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கும் போர்க்கப்பல், தேசிய பேரிடர் மீட்பு படையினர் இலங்கைக்கு உதவி செய்து வருகின்றனர். மீட்பு பணி இந்தியா சார்பில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இலங்கையில் சிக்கி தவித்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நம் நாட்டை போல் பாகிஸ்தானும், இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பியது. இலங்கையில் உள்ள பாகிஸ்தானின் தூதரகம் வழியாக நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சார்பில் இலங்கைக்கு மருந்து, மாத்திரை, உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை அனுப்பியது தெரியவந்துள்ளது.
அதாவது நிவாரண பொருட்கள் தொடர்பான போட்டோவை இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது. அதில், ‛‛எப்போதும் இலங்கையுடன் பாகிஸ்தான் இருக்கும். இன்றும் இலங்கையுடன் நாங்கள் நிற்கிறோம்'' என்று கூறப்பட்டு இருந்தது. அந்த போட்டோவில் பாகிஸ்தான் அனுப்பிய பொருட்களின் மேல் காலாவதி தேதி இடம்பெற்றது. அந்த தேதி ஏற்கனவே முடிந்து இருந்தது.
இதனால் காலாவதியான பொருட்களை பாகிஸ்தான், இலங்கைக்கு அனுப்பி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. அதன்படி 2024 ம் ஆண்டு 10வது மாதத்தில் காலாவதியான பொருட்களை இலங்கைக்கு, பாகிஸ்தான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. இதனால் பாகிஸ்தானை நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.
-
ஹார்முஸ் ஜலசந்தியில்.. அமெரிக்கப் படை முற்றுகை.. ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு.. உலகளவில் பதற்றம்! -
ஈரான் பிடிவாதம்.. விடாமல் காய் நகர்த்திய டிரம்ப்.. உலகையே உலுக்கிய அந்த 20 மணி நேரம்.. நடந்தது என்ன? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications