கொழும்பில் போராட்டக்காரர்களிடம் உதைபட்ட ராஜபக்சே குண்டர்கள்..துப்பாக்கி சூடு- 2 பேர் பலி; 8 படுகாயம்
கொழும்பு: பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத அரசு பதவி விலக கோரி அமைதி வழியில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது மகிந்த ராஜபக்சே ஆதரவு குண்டர்கள் வன்முறையை ஏவிவிட்டனர். இத்தாக்குதலில் 151 பேர் படுகாயமடைந்தனர். ஆனால் திடீரென பொதுமக்களோ ஒன்றிணைந்து ராஜபக்சே கும்பல் ஏவிய வன்முறை குண்டர்களை வளைத்து தாக்கி ஓடஓட விரட்டி அடித்தனர். இதனால் ஏரிகளில் குதித்தும் குப்பை தொட்டிகளில் பதுங்கியும் உயிர் தப்பினர் ராஜபக்சே ஆதரவு கும்பல். இதனிடையே இலங்கையில் இதுவரை 2 இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் மொத்தம் 2 பேர் பலியாகினர்.
இலங்கையின் காலிமுகத்திடலில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இரவும் பகலுமாக அரசுக்கு எதிராக மக்கள் போராடுகின்றனர். இந்த போராட்டத்தின் உச்சத்தால் ஜனாதிபதி கோத்தபாய, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் தமக்கான நெருக்கடியில் இருந்து தப்பிக்க ஜனாதிபதி கோத்தபாய பல்வேறு திரைமறைவு சதிகளை மேற்கொண்டு வருகிறார்.
Recommended Video

கொழும்பில் வன்முறை
இந்த நிலையில் இன்று காலை மகிந்த ராஜபக்சே அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் பிரதமர் பதவியில் இருந்து தாம் விலகப் போவதை மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் திடீரென கொழும்பில் வன்முறையில் இறங்கினர். கொழும்பு காலிமுகத் திடலுக்கு சென்ற இந்த வன்முறை கும்பல் அமைதிவழியில் போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. போராட்டகாரர்களின் கூடாரங்களைத் தீ வைத்து எரித்தது. அப்போது ராணுவமும் அங்கு குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது.

சிக்கிய ராஜபக்சே கும்பல்
இதனைத் தொடர்ந்து நிலைமை வேறுமாதிரியாக தலைகீழானது. தங்களை தாக்க வைத்த ராஜபக்சே குண்டர்கள் மீது பொதுமக்களும் போராட்டகாரர்களும் கை கோர்த்து திருப்பித் தாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்து போன அந்த கும்பல் ஏரிகளுக்குள் குதித்து தப்பி ஓடியது. ஒரு சிலர் குப்பை தொட்டிகளுக்குள் பதுங்கி கொண்டது. போராட்டகாரர்களிடம் சிக்கியவர்களை சிலோன் கொத்து பரோட்டா போல வெளுத்துவிட்டனர் பொதுமக்கள். அத்துடன் குண்டர்களை ஏற்றி வந்த பேருந்துகள் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன. குண்டர்களுக்கு மதுபானம் விநியோகித்த வாகனங்கள் சூறையாடப்பட்டன.

நாடு முழுவதும் கொந்தளிப்பு
இந்த நிலையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டது. இதனை கொழும்பு காலிமுகத் திடல் தொடங்கி நாட்டின் பல பகுதி மக்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இலங்கையின் பல பகுதிகளில் மகிந்த ராஜபக்சே கும்பலின் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இலங்கையின் பல நகரங்களில் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்களின் வீடுகள், கார்கள் தீக்கிரையாக்கப்படுகின்றன.
|
தீ வைப்பு- துப்பாக்கிச்சூடு
நிட்டம்புவ, கடவத்தை மற்றும் மினுவாங்கோவில் பேருந்துகள் மற்றும் சொகுசு கார்கள் பலத்த சேதம் அடைந்து உள்ளன. நிட்டம்புவவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 3 பேர் காயமடைந்தனர். புலத்சிங்கள பிரதேச சபை தவிசாளரும் மொறட்டுவ நகர சபை தலைவருமான சமன்லாலின் வீட்டிற்கு ஒரு குழுவினர் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கொழும்பு காலி முகத் திடலில் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கொழும்பு நோக்கி திரண்டும் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ வைப்பு- துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி
நிட்டம்புவ, கடவத்தை மற்றும் மினுவாங்கோவில் பேருந்துகள் மற்றும் சொகுசு கார்கள் பலத்த சேதம் அடைந்து உள்ளன. நிட்டம்புவவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 3 பேர் காயமடைந்தனர். புலத்சிங்கள பிரதேச சபை தவிசாளரும் மொறட்டுவ நகர சபை தலைவருமான சமன்லாலின் வீட்டிற்கு ஒரு குழுவினர் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கொழும்பு காலி முகத் திடலில் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கொழும்பு நோக்கி திரண்டும் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் வீரகெடிய பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். 8 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications