துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கைதான அர்ஜுன ரணதுங்காவுக்கு ஜாமீன்.. நீதிமன்றம் அதிரடி
Recommended Video

கொழும்பு: இலங்கை பெட்ரோலிய கழகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக கைது செய்யப்பட்ட அமைச்சர் அர்ஜுன ரணதுங்காவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்தார். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

அர்ஜுன ரணதுங்கா பெட்ரோலிய துறை அமைச்சராக உள்ளார். இவர் அர்ஜுன ரணதுங்காவின் பாதுகாவலர்கள் அங்கிருந்த பணியாளர்கள் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதனால் இரண்டு பேர் காயமடைந்தனர். இதில் ஒருவர் பலியானார். சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சில ஆவணங்களை ரணதுங்கா எடுக்க சென்ற போது இந்த அசம்பாவிதம் நடந்தது. இந்த நிலையில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கா, அதிபர் சிறிசேனாவின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இந்த துப்பாக்கிச் சூடு குறித்து ரணதுங்கா கூறுகையில் அவர்கள் என்னை கொல்ல வந்தனர். என் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் அந்த கழகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராயுங்கள்.
முதல்முறையாக நான் என் உயிருக்கு பயந்தேன். என் குடும்பம் மற்றும் குழந்தைகளை நினைத்து அஞ்சினேன் என்றார்.1996-ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்றவர் ரணதுங்கா. பின்னர் 1999-ஆம் ஆண்டு கேப்டன் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அடுத்த ஆண்டே அவர் ஓய்வு பெற்று அரசியலில் ஈடுபட தொடங்கினார்.












Click it and Unblock the Notifications