இலங்கையின் 8-வது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்பு- கொழும்பில் ஓயாத போராட்டம்
கொழும்பு: இலங்கையின் 8-வது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்றார். ரணில் விக்கிரமசிங்கே ஜனாதிபதி பதவியை ஏற்க எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகிறது.
Recommended Video
இலங்கை வரலாறு காணாத பெரும் பொருளாதார சீரழிவில் சிக்கி இருக்கிறது. இதனை சீரமைக்க முடியாத காரணத்தால் இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா செய்தார். மேலும் இலங்கையை விட்டே கோத்தபாய ராஜபக்சே ஓடிவிட்டார்.

இதனால் இலங்கையின் ஜனாதிபதியை அந்நாட்டு அரசியல் சாசனப்படி நாடாளுமன்ற எம்.பி.க்கள் தேர்வு செய்தனர். இலங்கை ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கே, டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திசநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். பெரும்பான்மை எம்.பி.க்கள் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனையடுத்து இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இலங்கையின் 8-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்றார். இலங்கையின் தலைமை நீதிபதி ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்கே, புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். இலங்கையின் அரசியல் வரலாற்றில் நாடாளுமன்ற எம்.பி.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே.
இதனிடையே நாட்டை சீரழித்த ராஜபக்சேக்களின் கூட்டாளியான ரணில் விக்கிரமசிங்கே, ஜனாதிபதியாக பொறுப்பேற்க எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ரணில் விக்கிரமசிங்கே தமது பதவியை ராஜினாமா செய்யும் வரை தங்களது போராட்டங்கள் தொடரும் என்று காலிமுகத் திடல் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications