உளவுத்துறை தகவலை அவர்கள் மறைத்துவிட்டார்கள்.. உண்மை விரைவில் வெளிவரும்.. இலங்கை அமைச்சர் பரபரப்பு!

இலங்கை குண்டுவெடிப்பு குறித்து வெளியான உளவுத்துறை தகவலை சிலர் வேண்டும் என்றே மறைத்துவிட்டார்கள் என்று இலங்கை அமைச்சர் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பு குறித்து வெளியான உளவுத்துறை தகவலை சிலர் வேண்டும் என்றே மறைத்துவிட்டார்கள் என்று இலங்கை அமைச்சர் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இதற்கு பின் பெரிய அரசியல் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த ஈஸ்டர் அன்று காலை 9 மணி அளவில் இலங்கையில் குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான அடுத்தடுத்த அதிர்ச்சி அளிக்க கூடிய தகவல்கள் வெளியாகி வருகிறது.

இலங்கை அரசு

இலங்கை அரசு

இந்த தாக்குதல் குறித்து இந்தியா இலங்கை அரசை ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இலங்கையில் தாக்குதல் நடக்க போகிறது என்று 1 மாதத்திற்கு முன்பே இந்திய உளவுத்துறை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தது. தாக்குதல் நடப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பும் இந்திய அரசு இலங்கையை எச்சரித்து இருந்தது.

என்ன நடவடிக்கை

என்ன நடவடிக்கை

ஆனால் இலங்கை அரசு இதன் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல உளவுத்துறை தகவல்கள் வந்த பின்பும் கூட இலங்கை அரசு பெரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால்தான் இலங்கையில் மிக மோசமான குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

அமைச்சர்

அமைச்சர்

இந்த நிலையில் இதுகுறித்து இலங்கை அமைச்சர் லட்சுமண் கிரியெல்லா அளித்துள்ள பேட்டியில், இதன் பின்பு பெரிய அரசியல் நடக்கிறது. உளவுத்துறை தகவல் கொடுத்தும் இதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எதோ காரணம் இருக்கிறது. இதில் ஒரு உயர் அதிகாரி மீது எனக்கு சந்தேகம் உள்ளது.

 யாரோ மறைத்து இருக்கிறார்

யாரோ மறைத்து இருக்கிறார்

அவர்தான் இந்த தகவலை அதிபருக்கு தெரியாமல் மறைத்து இருக்கிறார். யாரோ ஒருவரின் தூண்டுதலின் பெயரில்,இந்த உளவுத்தகவலை அவர் மறைத்து இருக்கிறார். இது தொடர்பான உண்மைகளை நான் விரைவில் வெளியே கொண்டு வருவேன், என்று லட்சுமண் கூறி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+