Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்த மத குருமார்களிடம் உள்ள 'அந்த பழக்கம்'.. அம்பலப்படுத்திய எழுத்தாளர்.. சிறையில் தள்ளிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: புத்த மதகுருமார்கள் மத்தியில், ஹோமோசெக்ஸ் பழக்கம் இருப்பதாக எழுதிய, எழுத்தாளர் ஒருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச மனித உரிமை சட்டத்தை அவர் மீறிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வடமத்திய இலங்கையின் போல்கவேலா பகுதியை சேர்ந்த பிரபல எழுத்தாளர் சக்திகா சத்குமாரா ( 33). இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு 9 நாட்கள் சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Sri Lanka arrests writer over gay issue about Buddhists

புத்த மதகுருமார்கள் மத்தியில் ஹோமோசெக்ஸ் பழக்கம் இருப்பதாக, மறைமுகமாக குறிப்பிட்டு, சக்திகா சத்குமாரா ஒரு சிறுகதை எழுதியிருந்தார். இதை சிங்கள மொழியில் புத்தகமாக வெளியிட்டதோடு, தனது பேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பாக, புத்த பிட்சுக்கள் குழு ஒன்று, போலீசில் அளித்த புகாரின்பேரில் சக்திகா சத்குமாரா கைது செய்யப்பட்டுள்ளார். ஹோமோசெக்ஸ் தடை என்பது, இலங்கையில், 1883ம் ஆண்டு காலனிய சட்டமாகும். தற்போது அதை யாரும் பின்பற்றுவது இல்லை.

நீதிமன்றத்திற்கு வெளியே சமாதானமாகுமாறு புத்த பிட்சுகளிடம் கோரிக்கைவிடுத்தும், அவர்கள் ஏற்க மறுத்ததால் எழுத்தாளரை கைது செய்ய வேண்டிய நிலை வந்ததாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+