கொரோனா பீதியால் கைதிகள் தப்ப முயற்சி: இலங்கை சிறையில் பயங்கர வன்முறை- 8 பேர் பலி; 71 பேர் படுகாயம்
கொழும்பு: கொரோனா அச்சத்தால் இலங்கை மஹர சிறையில் இருந்து கைதிகள் தப்ப முயன்ற சம்பவம் பெரும் வன்முறையாக வெடித்தது. இதில் 8 கைதிகள் பலியாகினர். மேலும் 71 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இலங்கையில் 1,091 சிறை கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக மஹர சிறையில் 183 பேருக்கு கொரோனா உறுதியானது.

இதனால் அச்சமடைந்த மஹர சிறையில் இருந்த மற்ற கைதிகள் தப்பிச் செல்ல முயன்றனர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும் சிறை கைதிகளுக்கும் நேற்று மோதல் வெடித்தது.
மஹர சிறையில் மோதல் வெடித்த நிலையில் கைதிகளின் உறவினர்களும் இன்று சிறை வளாகத்தின் குவிந்தனர். சிறைக்குள் தீ வைப்பு சம்பவங்களும் நிகழ்ந்தன.
மஹர சிறையில் இன்றும் நீடித்த மோதல்களில் 8 கைதிகள் பலியாகினர். போலீஸ் அதிகாரிகள் உட்பட மொத்தம் 71 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மஹர சிறை மோதல் இலங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications