கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கை.. பிரதமரானார் ரணில் விக்ரமசிங்க.. இன்று முக்கிய அமைச்சர்கள் மட்டும் பதவி ஏற்க வாய்ப்பு?

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் அடுத்த வாரம் புதிய அமைச்சரவை பதவி ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக இன்று ஒரு சில முக்கிய துறைகளுக்கான அமைச்சர்கள் மட்டும் பதவி ஏற்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் நிலவி வந்த மக்கள் போராட்டத்தை தொடர்ந்து பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினமா செய்தார். அதோடு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ராஜினாமா செய்யும்படி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார்.

மீண்டும் இலங்கை பிரதமரானார் ரணில் விக்கிரமசிங்கே- 'தலைமறைவு' மகிந்த ராஜபக்சே ட்விட்டரில் வாழ்த்து! மீண்டும் இலங்கை பிரதமரானார் ரணில் விக்கிரமசிங்கே- 'தலைமறைவு' மகிந்த ராஜபக்சே ட்விட்டரில் வாழ்த்து!

ரணில் விக்ரமசிங்க

ரணில் விக்ரமசிங்க

அங்கு சஜித் பிரேமதாசாவிற்கு பிரதமர் பதவியை வழங்க கோத்தபய ராஜபக்சே முயன்றார். ஆனால் அவர் நிறைய கட்டுப்பாடுகளை விதித்தார். இதை கோத்தபய ராஜபக்சே ஏற்கவில்லை. இதையடுத்து ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருக்கு 160க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சஜித் பிரேமதாசா

சஜித் பிரேமதாசா

இலங்கை பொதுஜன முன்னணி கூட்டணி இவருக்கு ஆதரவு அளிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் கலவரங்கள், கடந்த வாரம் ஏற்பட்ட மோதல்களுக்கு பின் இலங்கை பொதுஜன முன்னணி கூட்டணிக்கு மற்ற கட்சி எம்பிக்கள் ஆதரவு அளிப்பார்களா என்ற சந்தேகம் நிலவி வருகிறது. இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அளித்த பேட்டியில், இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்.

 உதவி வேண்டும்

உதவி வேண்டும்

ஐஎம்எப் மற்றும் உலக நாடுகள் இலங்கைக்கு உதவி செய்ய முன் வரும். இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கான போராட்டம் தொடரும். இலங்கையை சரிவில் இருந்து மீட்பதே என் நோக்கம். இதுவரை அமைச்சரவை பற்றி முடிவு எடுக்கவில்லை, என்று குறிப்பிட்டார். இதனால் இலங்கையில் அடுத்த வாரம் புதிய அமைச்சரவை பதவி ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக இன்று ஒரு சில முக்கிய துறைகளுக்கான அமைச்சர்கள் மட்டும் பதவி ஏற்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சரவை

அமைச்சரவை

அங்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் மே 17 தொடங்க உள்ளது. அன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளது. அதே நாளில் பிரதமர் ரணில் தனது பெரும்பான்மையை அங்கு அவையில் நிரூபிப்பார் என்று கூறப்படுகிறது. இலங்கையில் 5 முறை பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, அதிக காலம் அந்தப் பதவியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sri Lanka: Few ministers may take oath today in PM Ranil Wickremesinghe cabinet. இலங்கையில் அடுத்த வாரம் புதிய அமைச்சரவை பதவி ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X